சக்சினிக் நீரிலி
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஆக்சோலோன்-2,5-டையோன்[1] | |
வேறு பெயர்கள்
3,4-டை ஐதரோபியூரான்-2,5-டையோன், பியூட்டேண்டையாயிக் நீரிலி[1]
டை ஐதரோபியூரான்-2,5-டையோன் சக்சினிக் அமில நீரிலி சக்சினைல் ஆக்சைடு டை ஐதரோ-2,5-பியூராண்டையோன் | |
இனங்காட்டிகள் | |
108-30-5 ![]() | |
ChEBI | CHEBI:36595 ![]() |
ChemSpider | 7634 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C19524 ![]() |
பப்கெம் | 7922 |
| |
UNII | 6RF4O17Z8J ![]() |
பண்புகள் | |
C4H4O3 | |
வாய்ப்பாட்டு எடை | 100.07 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற படிக ஊசிகள்[2] |
அடர்த்தி | 1.23 கி/செ.மீ3[2] |
உருகுநிலை | 119 முதல் 120 °C (246 முதல் 248 °F; 392 முதல் 393 K)[3] |
கொதிநிலை | 261 °C (502 °F; 534 K)[2] |
சிதைவடையும் | |
-47.5•10−6 செ.மீ3/மோல் | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 147 °C (297 °F; 420 K)[4] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
1510 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[4] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சக்சினிக் நீரிலி (Succinic anhydride) என்பது (CH2CO)2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சக்சினிக் அமிலத்தின் அமில நீரிலியான இச்சேர்மம் நிறமற்ற திண்மமாகக் காணப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]சக்சினிக் அமிலத்தை நீர் நீக்க வினைக்கு உட்படுத்தி இச்சேர்மத்தை தயாரிக்கிறார்கள். இந்நீர் நீக்க வினையானது வெப்பமூட்டல்[5] அல்லது அசிட்டைல் குளோரைடு, பாசுபோரைல் குளோரைடு [6] உதவியுடன் நிகழ்த்தப்படுகிறது.
தொழில்முறைத் தயாரிப்புகளில் மாலியிக் நீரிலியை வினையூக்க ஐதரசனேற்றம் செய்து சக்சினிக் நீரிலி தயாரிக்கப்படுகிறது[5].
வினைகள்
[தொகு]சக்சினிக் நீரிலி நீராற்பகுப்பு அடைந்து சக்சினிக் அமிலத்தைக் கொடுக்கிறது:
- (CH2CO)2O + H2O → (CH2CO2H)2
ஆல்ககால்களுடன் (ROH) வினைபுரியும் போதும் இதே வகையான வினையே நிகழ்கிறது. ஆனால் ஒற்றைப்படி எசுத்தர் விளைபொருளாகக் கிடைக்கிறது:
- (CH2CO)2O + ROH → RO2CCH2CH2CO2H
தொடர்புடைய சேர்மங்கள்
[தொகு]
மாலியிக் நீரிலி ஒலிபீன்களுடன் சேர்ந்து ஆல்டர் ஈன் வினையில் ஈடுபட்டு ஆல்க்கீனைல்சக்சினிக் நீரிலிகளைக் கொடுக்கிறது. இத்தகைய சேர்மங்கள் காகிதம் தயாரித்தலில் பசையூட்டும் முகவர்களாகப் பயன்படுகின்றன. இச்செயல் முறையில் நீரிலிகள் செல்லுலோசு இழைகளில் ஐதராக்சில் குழுக்களைக் கொண்ட எசுத்தர்களாக உருவாகின்றன[7]. இதேபோல மாலியிக் நீரிலி பாலி ஐசோபியூட்டைலீன் உடன் சேர்ந்து பாலி ஐசோபியூட்டைலீனைல்சக்சினிக் நீரிலியைத் தருகிறது. பெட்ரோலியக் கூட்டுப் பொருட்கள் தொழிற்சாலைகளில் இவை கட்டுறுப்புகளாகப் பயன்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 835. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ 2.0 2.1 2.2 Record of CAS RN 108-30-5 in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health, accessed on 27 April 2010.
- ↑ McLean, Andrew; Adams, Roger (1936). "Succinic-α-d2,α'-d2 Acid and its Derivatives". J. Am. Chem. Soc. 58 (5): 804. doi:10.1021/ja01296a038.
- ↑ 4.0 4.1 Chemical data
- ↑ 5.0 5.1 வார்ப்புரு:Kirk-Othmer
- ↑ Louis F. Fieser, E. L. Martin, R. L. Shriner, and H. C. Struck (1932). "Succinic Anhydride". Organic Syntheses 12: 66. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV2P0560.; Collective Volume, vol. 2, p. 560
- ↑ Gess, Jerome; Rend, Dominic (2005). "Alkenyl Succinic Anhydride (ASA)". Tappi Journal 4: 25-30.