சக்கரியா தாமஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்கரியா தாமஸ்

சக்கரியா தாமஸ் (31 மார்ச் 1943 - 18 மார்ச் 2021) இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதியாவார்.  கேரள காங்கிரஸின் மூத்த தலைவராணா இவர், பிரிக்கப்படாத கேரள காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1977-1984 ஆண்டுகளில் கேரளாவின் கோட்டயத்திலிருந்து மக்களவையின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பொதுச்சேவை புரிந்துள்ளார்.. அவர் ஆம் ஆண்டு முதல் கேரள காங்கிரஸ் (சக்கரியா தாமஸ்) என்ற பிரிவு குழுவின் தலைவராக இருந்துள்ளார்.

வரலாறு[தொகு]

சக்கரியா தாமஸ், கேரள காங்கிரஸின் பல பிரிவுகளில் ஒன்றான, கேரள காங்கிரஸின் (சக்கரியா தாமஸ்) தலைவராக இருந்து, கொத்தமங்கலம், கடுதுருத்தி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். மேலும் இவர் இந்தியாவின் 6வது மற்றும் 7வது மக்களவையில் உறுப்பினராக இருந்து கேரளாவின் கோட்டயம் தொகுதியை 1977 முதல் 1984 வரை பதவியில் இருந்து பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். கொரோனா நோயில்  இருந்து மீண்டாலும், அதைத் தொடர்ந்த கல்லீரல் மற்றும் சுவாச மண்டலம் பிரச்சனைகள் காரணமாக அவைகள் பாதிக்கப்பட்டு நிமோனியா ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் 18 மார்ச் 2021 அன்று கொச்சியில் இறந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கேடி சக்கரியா மற்றும் அச்சம்மா ஆகியோரின் மகனான, சக்கரியா தாமசுக்கு, லலிதா என்ற மனைவியும் நிர்மலா, அனிதா, லதா ஆகிய மூன்று மகள்களும், சகரியா என்ற மகனும் உள்ளனர். இவர் திருவிதாங்கூர் சுகர்ஸ் மற்றும் கேரள மாநில தொழில்துறை மற்றும் நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கரியா_தாமஸ்&oldid=3799821" இலிருந்து மீள்விக்கப்பட்டது