சகுந்தலா பகத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகுந்தலா பகத்
Shakuntala Bhagat
பிறப்புசகுந்தலா ஜோஷி
6 பிப்ரவரி 1933
இறப்பு14 அக்டோபர் 2012
பணிகட்டடப் பொறியாளர்
அறியப்படுவதுபால வடிவமைப்பும் கட்டுமானமும்

சகுந்தலா ஏ. பகத் (Shakuntala A. Bhagat) இந்தியாவின் முதலாவது கட்டடப் பொறியாளராவார்.[1] [2] 1933 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சகுந்தலா ஏ பகத்தின் இயற்பெயர் சகுந்தலா ஜோசி என்பதாகும்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சகுந்தலா 1906-1991 ஆம் ஆண்டுகள் காலத்தைச் சேர்ந்த பாலப் பொறியாளர் எசு.பி. ஜோஷியின் மகள் ஆவார்.

1953 ஆம் ஆண்டு சகுந்தலா மும்பையில் உள்ள வீர்மாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப நிறுவனத்தில் கட்டடப் பொறியியல் பட்டம் பெற்ற முதல் பெண் ஆனார். மேலும் சகுந்தலா பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கட்டடம் மற்றும் கட்டமைப்பு பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். [3]

தொழில்[தொகு]

சகுந்தலா கட்டடப் பொறியியல் உதவிப் பேராசிரியராகவும் , 1960 ஆம் ஆண்டுகளில் மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்லூரியில் கன கட்டமைப்பு ஆய்வுக்கூடத்தின் தலைவராக இருந்தார். 1970 ஆம் ஆண்டில், இவரும் இவரது கணவரும் சொந்தமாக ஒரு பொறியியல் நிறுவனத்தை பகத் பொறியியல் நிறுவனம் என்ற பெயரில் நிறுவினர். காப்புரிமை பெற்ற முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட பெட்டகக் கட்டுமான வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்ற பாலம் கட்டுமான நிறுவனமான குவாட்ரிகானையும் நிறுவினர்.[4] [5] அமெரிக்கா, செருமனி மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள திட்டங்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான பாலங்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் சகுந்தலா பகத் பணியாற்றினார். இலண்டன் காரை மற்றும் கற்காரை சங்கத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.[3]

சகுந்தலா பகத் உயர்நிலைக் குழுமமான இந்திய சாலை காங்கிரசின் உறுப்பினராகவும், இந்தியாவின் பொறியியல் நிறுவனத்தில் உறுப்பினராகவும் இருந்தார். 1972 ஆம் ஆண்டு கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு வாரியம் இவருடைய செயல்பாடுகளுக்காக விருது வழங்கி சிறப்பித்தது. 1993 ஆம் ஆண்டில் சகுந்தலா 1993 ஆம்ம் ஆண்டுக்கான பெண் பொறியாளராக அங்கீகரிக்கப்பட்டார். [3] [4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சகுந்தலா சக கட்டடப் பொறியாளர் அனிருதா சிவ்பிரசாத் பகத்தை மணந்தார். சகுந்தலா பகத் 2012 ஆம் ஆண்டு தனனுடைய 79 ஆம் வயதில் இறந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shukla, Palak J.; Desai, Atul K.; Modhera, Chetankumar D. (November 2018). "Women in Civil Engineering in India". Journal of Emerging Technologies and Innovative Research (JETIR) 5. http://www.jetir.org/papers/JETIRK006156.pdf. 
  2. "Meet Madhubanti Bhattacharyya". ICE News. 27 May 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-10-09.
  3. 3.0 3.1 3.2 Chattopadhyay, Anjana, 1950- (2018). Women scientists in India : lives, struggles & achievements (First ). New Delhi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-237-8144-0. இணையக் கணினி நூலக மையம்:1045373879. https://www.worldcat.org/oclc/1045373879. Chattopadhyay, Anjana, 1950- (2018). Women scientists in India : lives, struggles & achievements (First ed.). New Delhi. ISBN 978-81-237-8144-0. OCLC 1045373879.CS1 maint: multiple names: authors list (link)
  4. 4.0 4.1 4.2 "Shakuntala A. Bhagat, First Woman Civil Engineer, Bridge Superstructure". Projects Monitor (in அமெரிக்க ஆங்கிலம்). 2013-07-04. பார்க்கப்பட்ட நாள் 2020-10-09.
  5. Bhagat, S. A.; Bhagat, A. S. (December 1979). "Quadricon Prefabricated System for Bridges". Journal of the Indian Roads Congress 40 (3). பன்னாட்டுத் தர தொடர் எண்:0258-0500. https://trid.trb.org/view/161522. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகுந்தலா_பகத்&oldid=3211003" இலிருந்து மீள்விக்கப்பட்டது