க‌ணினி அறிவியல் க‌ழ‌க‌ம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Computer Sciences Corporation
வகைபொது நிறுவனம்
நிறுவுகைஏப்ரல் 1959
நிறுவனர்(கள்)ராய் நட்
பிளெட்சர் ஆர். ஜோன்சு
பாப் பாட்ரிக்
தலைமையகம்பால்ஸ் சர்ச், வர்ஜீனியா, அமெரிக்க ஐக்கிய நாடு
சேவை வழங்கும் பகுதிஉலகளாவியது
முக்கிய நபர்கள்ஜான் லோரி, தலைவர், முதன்மை செயல் அதிகாரி[1]
தொழில்துறைதகவல் தொழிநுட்பம்
சேவைகள்தகவல் தொழில்நுட்பம், வணிக ஆலோசனை, ஒப்பந்த சேவை அமர்த்தம்
வருமானம்Red Arrow Down.svg US$ 15.877 பில்லியன் (2012)[2]
இயக்க வருமானம்Red Arrow Down.svg US$ -4.347 பில். (2012)[2]
நிகர வருமானம்Red Arrow Down.svg US$ -4.242 பில். (2012)[2]
மொத்தச் சொத்துகள்Red Arrow Down.svg US$ 11.189 பில். (2012)[2]
மொத்த பங்குத்தொகைRed Arrow Down.svg US$ 2.779 பில். (2012)[2]
பணியாளர்96,000 (2012)[3]
துணை நிறுவனங்கள்CSC இந்தியா,
Computer Sciences Raytheon
இணையத்தளம்www.csc.com

கணினி அறிவியல் கழகம் (Computer Sciences Corporation, CSC) என்பது ஐக்கிய அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பன்னாட்டுத் தகவல் தொழிநுட்ப நிறுவனம் ஆகும். இது அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஃபால்சு ச‌ர்ச் என்ற இட‌த்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இது தோராயமாக 70 நாடுகளில் 90000 பணியாளர்களை கொண்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அமெரிக்க கூட்டரசு மற்றும் அமெரிக்க அல்லாத அரசு நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய நிறுவங்கள் பட்டியலான பார்ச்சுன் 500 பட்டியலில் 2012 படி 162 இடத்தை பெற்றுள்ளது 
  
கலிபோர்னியாவில் உள்ள கிளை நிறுவனம்

வரலாறு[தொகு]

கணினி அறிவியல் கழகம் 1959 ஆண்டு ஏப்ரல் மாதம் ராய் நட், பிலெட்ச்சர் ஜோன்சு ம‌ற்றும் பாப் பாட்ரிக் ஆகிய மூவரால் துவங்கப்பட்டது. 1963 ஆண்டு வாக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக வளர்ந்தது.இவர்களது இலக்கு நிரலாக்க கருவிகளான தொகுப்பி (Assembler) மற்றும் மொழிமாற்றியை (Compiler) அளிப்பதே ஆகும்.

மிக‌ப்பெரிய‌ நிறுவ‌னமான‌ சிஎசி உல‌கின் 500 பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ட்டிய‌லில் 162 இட‌த்தைப் பெற்று திக‌ழ்கிற‌து. 1968 ஆம் ஆண்டு இறுதியில் சிஎசி நியூயார்க் பங்குச் சந்தையில் கால‌டி எடுத்து வைத்த‌து. மேலும் கன‌டா, இந்தியா, செருமனி, எசுப்பானியா, இத்தாலி, பிரேசில், ஐக்கிய இராச்சியம் ஆகிய‌ நாடுக‌ளில் பரவியது.

வணிகம்[தொகு]

க‌ணினி அறிவியல் க‌ழ‌க‌ம் தனது சேவைகளை பின்வரும் மூன்று சேவை பிரிவுகள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.

 • வட அமெரிக்க பொதுத்துறை பிரிவு (North American Public Sector) : இப்பிரிவு ஐக்கிய அமெரிக்க கூட்டரசின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவையளிக்கும் நிறுவனமாக திகழ்கிறது.


 • மேலாண் சேவை பிரிவு (Managed Services Sector) : இப்பிரிவு வாடிக்கையாளர்களுக்கு தகவல் தொழில்நுட்ப புற ஒப்படைப்பு சேவைகளை பல்துறைதுறைகலான பாதுகாப்பு, வாகனம், உற்பத்தி, நிதிச்சேவைகள், உடல்நலம் மற்றும் தொலைதொடர்பு ஆகியவற்றிற்கு அளித்து வருகிறது.பயனர்களுக்கு தகவல் தொழில்நுட்ப புற ஒப்படைப்பு (Outsourcing) சேவைகளை அளித்து வருகிறது.


 • வணிக தீர்வு மற்றும் சேவை பிரிவு (Business solutions and services) : இப்பிரிவு குறிப்பிட்ட தொழில் சார் தீர்வுகலான அறிவுரை அளித்தல் (Consultancy) மற்றும் கணினி ஒருங்கிணைப்பு (Systems integration), வணிக செயலாக்க புற ஒப்படைத்தல் (BPO) மற்றும் அறிவுசார் மென்பொருளை பல்துறைகலான ரசாயனம், ஆற்றல் மற்றும் இயற்கை வளத்துறை; நிதித்துறை சேவைகள்; தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் துறை ; உற்பத்தி துறை; உடல்நல சேவை துறை; மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது. கூடுதலாக ஆஸ்திரேலியாவில் தொழில்சார் பணியமர்த்த சேவைகளையும், ஆசியாவில் கணினி உபகரணங்கள் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு சேவைகளையும், ஐக்கிய அமெரிக்காவில் வரவின அறிக்கை சேவைகளையும் அளித்து வருகிறது.


கையகப்படுத்தல்[தொகு]

க‌ணினி அறிவியல் க‌ழ‌க‌ம் பல நிறுவனங்களை கையகபடுதியுள்ளது. அவற்றுள் சில பின்வருமாறு:

 • செர்விஷ்மெஷ் (2013)
 • இன்பொசிம்ப்ச் (2011)
 • மரிகோம் சிஸ்டம்ஸ் (2011)
 • கோவன்சிஸ் தொழிற்குழுமம்(2007)

விருதுகள்/அங்கீகாரம்[தொகு]

 • மென்பொருள் இதழின் (Software Magazine's) உலகின் மிகப்பெரிய 500 மென்பொருள் நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலில் 8 இடத்தை பெற்றுள்ளது.[4]
 • அமெரிக்காவின் 2011 பசுமை பாதுகாப்பிற்காக முதல் 50 நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளது [5]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Management and Board of Directors". 2013-03-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Financial Tables". Computer Sciences Corporation Investor Relations. 2012-08-19 அன்று பார்க்கப்பட்டது.
 3. "CSC Investors Relations: 2012 Annual Report" (PDF). 2012-12-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-03-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 4. "CSC Named to Software Magazine's 30th Annual Software 500". 2014-03-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-01-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 5. "CSC Recognized for Third Consecutive Year as One of America's Greenest Companies by Newsweek". 2014-01-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-01-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)