கோமதி மாரிமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்கோமதி மாரிமுத்து
தேசியம்இந்தியர்
பிறப்பு8 பெப்ரவரி 1989 (1989-02-08) (அகவை 30)
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)விரைவோட்டம்

கோமதி மாரிமுத்து (Gomathi Marimuthu) தமிழகத்தை சார்ந்த இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்ற 23ஆவது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் 800 மீட்டர் தொலைவை 2.02.70 நிமிடங்களில் கடந்தார். இவரின் வயது 30 ஆகும். இவர் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் முடிகண்டம் பகுதியைச் சார்ந்தவர் ஆவார்.[1] [2] இவர் இளங்கலை வணிகவியல் பட்டதாரி ஆவார்.[3] இவர் பெங்களூருவில் வருமான வரித்துறையில் பணிபுரிந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் ஏழாவது இடத்தையும், 2015 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 4 ஆவது இடத்தையும் பிடித்திருந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமதி_மாரிமுத்து&oldid=2709164" இருந்து மீள்விக்கப்பட்டது