உள்ளடக்கத்துக்குச் செல்

கோபெ செயற்கைமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரண்டப் பின்புலத் தேடி Cosmic Background Explorer

நிறுவனம்நாசா(NASA)
ஒப்பந்தப் பணியகம்கோடார்டு விண்ணோச்சு நடுவணகம்
(Goddard Space Flight Center)
குறிப்பிட்டக் குறிக்கோள் பணிபேரண்ட இயல்
செயற்கைமதிபூமி
ஏற்றம் (launch) நவம்பர் 18, 1989
டெல்ட்டா ஏவுகணை மீது
பணியின் காலம்~4 ஆண்டுகள்
பொருண்மை2270 கி.கிராம்
NSSDC ID1989-089A
வலைத்தளம்http://lambda.gsfc.nasa.gov/product/cobe/
Orbital elements
பெரும் அச்சின் பாதி900.2 km
நடுவிலக்கம்0.0006 – 0.0012
சாய்மம்99.3°
சுற்று நேரம்103 minutes
Right ascension of
the ஏறும் கோணம்
270°
Argument of perigee???
அளவீட்டுக் கருவிகள்
DIRBEஅகசிவப்பு போலோ வெப்ப அளவி
FIRASமிகநீள அகச்சிவப்பலை அளவி
DMRஒப்பீட்டு நுண்ணலை அளவி

பேரண்டத்தின் பின்புலத் தேடி என்னும் பொருள்படும் COBE (Cosmic Background Explorer) செயற்கைமதி (செயற்கைத் துணைக்கோள்) தேடி-66 (Explorer 66) என்றும் அழைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் பேரண்டத்தில் பின்புலமாய் இருக்கும் நுண்ணலைக் கதிர்வீச்சைப் பற்றி துல்லியமாய் ஆய்வதாகும். இவ்வளவீடுகளின் துணையால் பேரண்டத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றி அறிய இயலும் என்று அறிஞர்கள் கருதினார்கள்.

வரலாறு

[தொகு]

1974ல் நாசா ஓர் அறிவிப்பு செய்திருந்தது. அதில் சிறிய அல்லது நடுத்தர அளவுள்ள விண்கலங்கள் செலுத்த இருப்பதாகவும், பொருத்தமான வான் - விண்ணியல் அறிவியல் சோதனைகள் செய்ய அழைப்பு விடுத்திருந்தனர். வந்த 121 முன்வைப்புகளில், 3 கருத்து முன்வைப்புகள் பேரண்டத்தின் பின்புல கதிர்வீச்சைப் பற்றி அறிவது பற்றி இருந்தது. கடைசியில் இவையும் ஏற்கப்படவில்லை. ஆனால் 1976ல் இந்த 3 முன்வைப்புகளின் ஆசிரியர்களை கூட்டாக சேர்ந்து ஒரு புதிய செயற்கைமதி செய்யப் பரிந்துரைகளைத் தரக் கோரியிருந்தார்கள். அதில் கீழ்க்காணும் அமைப்புகள் கூறுகள் இருந்தன.

  1. Differential microwave radiometer (DMR) that would map the CMB to detect the intrinsic anisotropy in the microwave background, with George Smoot as Principal Investigator (PI).
  2. Far-infrared absolute spectrophotometer (FIRAS) to measure the spectrum of the CMB to see if it was a blackbody curve, with John Mather as PI.
  3. Diffuse Infrared background experiment (DIRBE) to detect early infrared galaxies with Mike Hauser as PI.
Launch of the COBE spacecraft நவம்பர் 18, 1989.

நாசா இந்த கூட்டு முன்வைப்பை 30 மில்லியன் அமெரிக்க டாலருக்குக் குறைவாக ஆகுமெனில் ஒப்புக்கொள்ள முடிவெடுத்தது. பல்வேறு இடர்ப்பாடுகளால், 1981 ஆம் ஆண்டு வரை இப்பணி துவங்க வில்லை. கடைசியாக நவம்பர் 18, 1989ல் சூரியனோடு ஒத்த சுழல்நேர சுற்றுப்பாதையில் செலுத்தி சீர் ஓட்டம் பெற்றது. ஏப்ரல் 23, 1992ல் பேரண்டதின் ஆதிமூலமான கூறுகளைக் கண்டறிந்ததாக அமெரிக்க அறிஞர்கள் அறிவித்தார்கள். இக்கண்டுபிடிப்புக்கு அடிப்படையாக, பேரண்டத்தின் பின்புலத்தில் அறியப்படும் நுண்ணலை வீச்சானது எல்லாதிசைகளிலும் ஒரே சீராக இல்லாமல் இருக்கும் பண்பைக் கொண்டு அறியப்பட்டது.

2006ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு இக்கண்டு பிடிப்புக்காக ஜான் மேத்தர் அவர்களுக்கும், ஜியார்ஜ் ஸ்மூட் அவர்களுக்கும் அளிக்கப்பட்டது.

Model of the Galactic disk as seen edge on from our position

பரவலாக அறியப்பட்ட புத்தக்கம்

[தொகு]
  • Smoot, G.F. & K. Davidson. (1993). Wrinkles in Time,

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபெ_செயற்கைமதி&oldid=1734376" இலிருந்து மீள்விக்கப்பட்டது