கோபிகாபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேஷ்வின்
கோபிகா
பாயி
பிறப்பு20 திசம்பர், 1724, சூப்பா, பார்மெர்
இறப்பு11 ஆகத்து, 1778, நாசிக்
வாழ்க்கைத்
துணை
பேஷ்வா பாலாஜி பாஜி ராவ்
பிள்ளைகள்விசுவாசராவ்
மாதவராவ்
பேஷ்வா நாராயணராவ்
உறவினர்கள்பிகாஜி நாயக் இரஸ்தே (தந்தை)
கோபிகா
மரபுபட் (திருமணம் மூலம்)
இரஸ்தே (பிறாப்பின் மூலம்)

கோபிகாபாய் (Gopikabai) (பிறப்பு 1724 திசம்பர் 20, இந்தியாவின் புனேவுக்கு அருகிலுள்ள சூப்பா - இறப்பு 1778 ஆகத்து 11 நாசிக் ) இவர் புனேவுக்கு அருகிலுள்ள வய் நகரைச் சேர்ந்த பிகாஜி நாயக் இரஸ்தேவின் மகளாவார்.

குழந்தைப் பருவம்[தொகு]

பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்தின் மனைவி இராதாபாய், இராஸ்ட் குடும்பத்திற்கு வருகை புரிந்தபோது கோபிகாபாயை கவனித்தார். மத உண்ணாவிரதம் மற்றும் சடங்குகளை கோபிகாபாயின் மரபுவழி அனுசரிப்பால் இராதாபாய் ஈர்க்கப்பட்டார். மேலும்,கோபிகாபாய் மத விஷயங்களை நன்கு அறிந்தவர் என்பதாலும், பிராமணக் குடும்பங்களில் நடைமுறையில் உள்ள பழக்கவழக்கங்கள் பின்பற்றத் தெரிந்தவர் என்பதாலும், முதலாம் பாஜி ராவின் மூத்த மகனான பாலாஜி பாஜிராவ் (பின்னர் நானாசாகேப் பேஷ்வா என்று அழைக்கப்பட்டார்) என்பவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார்.

மரபுவழி வளர்ப்பு[தொகு]

கோபிகாபாய் தனது பிற்கால வாழ்க்கையில் கடுமையான குறைபாடுகளை எதிர்கொண்டார். ஏனெனில் அவர் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டார். அரசவையின் நிர்வாக அல்லது இராணுவ விஷயங்களை கையாள்வதில் சரியான பயிற்சி பெறவில்லை. இவரது மரபுவழி மத வளர்ப்பும், தனது ஆணவமான நடத்தையும், குறுகிய எண்ணம் கொண்ட கண்ணோட்டமும் ஒரு முக்கிய காரணமாக கருதப்பட்டது. இவரது இரண்டாவது மகன் மாதவராவ் உடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்வது உட்பட, பிற்கால வாழ்க்கையில் கோபிகாபாய் எடுத்த சில மோசமான முடிவுகள் இவரது மரபுவழி வளர்ப்பின் மூலம் எனத் தெரிகிறது. இவரது மதம் சார்ந்த வளர்ப்பால் சாகுஜி மற்றும் பேஷ்வா பாலாஜி பாஜி ராவ் நடத்தும் அரசவை அரசியலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

பொறாமையும், கர்வமும்[தொகு]

இவரது கணவர் பேஷ்வா ஆன பிறகு, கோபிகாபாய் வீட்டில் உள்ள மற்ற பெண்களுடன் சரியாக பழக முடியவில்லை. மேலும், பேஷ்வாவின் சகோதரர் இரகுநாதராவ் என்பவரை மணந்த தனது உறவினர் ஆனந்திபாயுடன் ஒரு போட்டியை வளர்த்துக் கொண்டார். பேஷ்வாவின் உறவினர் சதாசிவராவ் பாவின் மனைவி பார்வதிபாய் மற்றும் இவருக்கும் இடையே ஒரு பிளவு ஏற்பட்டது. இது சாகுஜி மற்றும் நானாசாகேப் பேஷ்வா தனது மூத்த மகன் விஸ்வாசராவ் என்பவரை திருமணம் செய்ய பார்வதிபாயின் மருமகள் இராதிகாபாயைத் தேர்ந்தெடுத்தபோது ஏற்பட்டது. அப்தாலியை தோற்கடித்த பிறகு அனைத்து பாராட்டுக்களையும் பேஷ்வாவுக்குச் செல்ல இவர் விரும்பவில்லை. மேலும் இதில் விசுவாசராவுக்கும் ஒரு பங்கு இருக்கவேண்டும் என விரும்பி அப்தாலிக்கு எதிரான போருக்கு சதாசிவராவுடன் விசுவாசராவை அனுப்ப வலியுறுத்தினார். நானாசாகேப்பிற்குப் பிறகு விசுவாசராவ் அடுத்த பேஷ்வாவாக இருப்பதை உறுதி செய்வதற்காக அவர் இதைச் செய்தார். சதாசிவராவை அடுத்த பேஷ்வாவாக்க நானாசாகேப் திட்டமிட்டிருப்பதாக இவர் சந்தேகித்தார். [1]

நானாசாகேப் பேஷ்வாவின் மரணம்[தொகு]

இராதிகாபாய் ஒரு மோசமானவர் என்றும், மூன்றாம் பானிபட் போரின் போது தனது மகன் விசுவாசராவ் இறந்ததற்கு அவர்தான் காரணம் என்றும் கோபிகாபாய் குற்றம் சாட்டினார்.

ஒரு மோசமான வாழ்க்கை[தொகு]

இவரது மரபுவழி வளர்ப்பின் படி கோபிகாபாய் தனது வாழ்நாள் முழுவதும் பிச்சைக்கார வாழ்க்கையையே வாழ்வதாக சபதம் செய்தார். ஒரு திருவோட்டைக் கொண்டு, புனித நகரமான நாசிக்கில் பிச்சையெடுத்து வாழ்ந்தார்.[2]

இறப்பு[தொகு]

கோபிகாபாய் 1778 ஆகத்து 11 அன்று நீரிப்போக்கு நோயினால் இறந்து போனார். இவரது இறுதிச் சடங்குகள் கோதாவரி ஆற்றின் கரையில் நடத்தப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Patil, Vishwas. Sambhaji. 
  2. "पेशवीण गोपिकाबाईंचा असा झाला अहंकारामुळे दुर्दैवी अंत!!". बोभाटा (in ஆங்கிலம்). 2020-01-13. Archived from the original on 2020-02-13. பார்க்கப்பட்ட நாள் 2020-02-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிகாபாய்&oldid=3552152" இலிருந்து மீள்விக்கப்பட்டது