கோபாம் ஓங்பி நங்பி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபாம் ஓங்பி நங்பி தேவி
பிறப்புஇம்பால்
இறப்புஇம்பால்

கோபாம் ஓங்பி நங்பி தேவி (Haobam Ongbi Ngangbi Devi) (பிறப்பு:1924 ஆகஸ்ட் 1 - 2014 சூன் 12 ) இவர் ஓர் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரும் , இசைக்கலைஞரும் ஆவார்.[1] இவர் இலாய் கரோபா திருவிழா மற்றும் இராசின் மணிப்பூரி நடன வடிவங்களில் நிபுணத்துவம் பெற்றவராவார். [2][3][4] 2010 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். [5][6]

சுயசரிதை[தொகு]

இலாய் கரோபா நடனம்

கோபாம் ஓங்பி நங்பி தேவி 1924 ஆகஸ்ட் 1 அன்று [2] இந்திய மாநிலமான மணிப்பூரின் இம்பாலுள்ள யூரிபோக் பச்சஸ்பதி லெய்காய் என்ற இடத்தில் பிறந்தார். இவர் மணிப்பூரி சங்கீர்த்தன் சங்கத்திலிருந்து ஐந்து வயதிலிருந்தே மணிப்பூரி நடனம் மற்றும் இசையைக் கற்கத் தொடங்கினார்.[7] performer.[1] மேலும் 1930 இல் கொல்கத்தாவில் நடந்த ஜெய்பைகுரி விழாவில் ஒரு கலைஞராக அறிமுகமானார். 1932 ஆம் ஆண்டு முதல் புகழ்பெற்ற ஆசிரியர்களான குரு அதோம்பா சிங், யும்னம் ஓஜா நடும் சிங், குரு எம். அமுபி சிங், மற்றும் நங்கங்கோம் ஓஜா ஜுகிந்திரோ சிங் ஆகியோரின் கீழ் லாய் கரோபா, இராஸ் மற்றும் மலைகளின் இன நடன வடிவங்களைப் படித்தார். 1940 வரை. இவர் உஸ்தாத் மெய்ஸ்னம் பிது சிங் மற்றும் சிங்காக்கம் ராதாச்சரன் சிங் ஆகியோரிடமிருந்து பாரம்பரிய இசையையும் கற்றுக்கொண்டார்.[8] [2]

மணிப்பூரிலிருந்து வந்த முதல் பாரம்பரிய பாடகர் என அழைக்கப்படும் நங்காபி தேவி, அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சிகளை பதிவு செய்யத் தொடங்கினார்.[9] மேலும் 1948 ஆம் ஆண்டில் மணிப்பூரியின் முதல் திரைப்படமான மைனு பெம்ச்சா என்பதில் பின்னணி பாடினார்.[1] ஜவகர்லால் நேரு மணிப்பூர் நடன அகாதமியை நிறுவியபோது, நங்காபி தேவி நடனம் மற்றும் இசை துறைகளில் ஆசிரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். [10] ஆரம்பத்தில் மிதமான வளர்ச்சியைக் கொண்டிருந்த அகாதமி, தேவி அங்கு இலாய் கரோபாவின் ஆசிரியராக இருந்த காலத்தில் நன்கு வளர்ச்சியடைந்தது. [11] இவர் இலாய் கரோபா குறித்து ஆராய்ச்சி செய்ததாகக் கூறப்பட்டது. மேலும் நிறுவனத்திற்கு ஒரு பாடத்திட்டத்தைத் தயாரித்த பெருமையும் இவருக்கு உண்டு. லலித கலா பவனில் தனது படிப்பைத் தொடர்ந்ததன் மூலம் தன்னைப் புதுப்பித்துக் கொண்ட இவர், 1936 முதல் 1945 வரையிலான காலகட்டத்தில் மணிப்பூர் நாடக ஒன்றியம், ரூப்மகால் நாடக அரங்கம் மற்றும் ஆரியன் நாடக அரங்கம் ஆகியவற்றில் நடிகையாக பணியாற்றினார். [1]

தேவி ஜே.என்.எம் நாட்டிய டான்ஸ் அகாதமியில் தனது பணியைத் தொடர்ந்தார். அங்கு இவர் 1966 ஆம் ஆண்டில் நாட்டுப்புற மற்றும் சமூக நடனத் துறையின் தலைவரானார்.[2][1] மேலும் 1985 இல் ஓய்வுபெறும் நேரத்தில் அகாதமியின் துணை முதல்வர் பதவியை வகித்தார். தேவி, தனது சுறுசுறுப்பான நாட்களில், குடியரசு தின நாட்டுப்புற நடன விழா, தேசிய நடன விழா மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கலாச்சார பரிவர்த்தனை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச சந்தர்ப்பங்களிலும் விழாக்களிலும் பங்கேற்றுள்ளார்.

கோபாம் ஓங்பி நங்பி தேவி 1941 இல் ஹோபாம் அமுபா சிங் என்பவரை மணந்தார். தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தார். தேவி 2014 சூன் 11 அன்று இம்பாலில் உள்ள தனது இல்லமான யூரிபோக் டூரங்பாம் லெய்காயில் இறந்தார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்[தொகு]

அசாம் அரசிடமிருந்து பிரங்கனா பட்டமும், மணிப்பூர் அரசிடமிருந்து தங்கப் பதக்கமும் பெற்ற நங்பி தேவிக்கு 1980 இல் மணிப்பூர் மாநில கலா அகாதமி விருது வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1985 ஆம் ஆண்டில், மணிப்பூரி சாகித்ய பரிசத் இவருக்கு நிர்த்திய பூசண் விருது வழங்கியது. 1993 இல், இவர் சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார். 2010 ஆம் ஆண்டில், குடிமக்களின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருது வழங்கி குடியரசு தின கௌரவப் பட்டியலில் இந்திய அரசு இவரைச் சேர்த்தது.[4]

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 "E Pao". E Pao. 23 April 2010. 18 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 2.2 2.3 "Sangeet Natak Akademi". Sangeet Natak Akademi. 2014. 19 December 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Indian Express". Indian Express. 7 April 2010. 4 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 4. 4.0 4.1 "India online". India online. 2014. 18 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Padma Shri" (PDF). Padma Shri. 2014. 15 நவம்பர் 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 11 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Economic Times". Economic Times. 2010. 18 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 7. Jamini Devi (2010). Cultural History of Manipur: Sija Laioibi and the Maharas. Mittal Publications. பக். 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788183243421. https://books.google.com/?id=wLzDLsEYZGQC&pg=PA71&lpg=PA71&dq=Sankirtan+Pala#v=onepage&q=Sankirtan%20Pala&f=false. 
 8. Chowdhurie, Tapati (12 June 2014). "A doer who was devotee". The Hindu. http://www.thehindu.com/features/friday-review/dance/a-doer-who-was-devotee/article6107269.ece. பார்த்த நாள்: 25 June 2018. 
 9. "Mainu Pemcha". E Pao. 2014. 19 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 10. "JNMDA". Sangeet Natak Akademi. 2014. 19 December 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 11. "JNMDA faculty". Sangeet Natak Akademi. 2014. 19 December 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 December 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

 • "Economic Times". Economic Times. 2010. 18 December 2014 அன்று பார்க்கப்பட்டது.