கோதண்டராமர் திருக்கோயில், பூதிமுட்லு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோதண்டராமர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:பூதிமுட்லு
சட்டமன்றத் தொகுதி:வேப்பனபள்ளி
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:கோதண்டராமர்
தாயார்:சீதை தேவி
சிறப்புத் திருவிழாக்கள்:ராம நவமி

கோதண்டராமர் திருக்கோயில் என்பது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் உள்ள பூதிமுட்லு என்னும் கிராமத்தில் அமைந்துள்ள இராமர் கோயிலாகும். இது 16ம் நூற்றாண்டினை சேர்ந்த கோயிலாகும்.

வரலாறு[தொகு]

இக்கோயிலில் உள்ள மூலவர் சிலையானது கெலமங்கலம் ரத்தினகிரி கோட்டையில், பராமரிப்பின்றி கிடந்த கோயிலில் இருந்து கொண்டுவந்து நிறுவப்பட்டு கோயில் எழுப்பப்பட்டது என்று தெரிகிறது. இது சுமார் 16 ஆம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வு என்றும் கூறப்படுகிறது.[1]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலின் வாயிலானது வடதிசை நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தகுளமானது அழகிய கட்டமைப்புடன் சிறப்பாக அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் மடப்பள்ளியும், மண்டபங்களும் அமைந்துள்ளன. கருவறையில் வில்லேந்திதிய கோதண்டராமர், சீதை, இலக்குவனுடன் அழகுற காட்சியளிக்கின்றனர்.[2] இக்கோயிலின் தேரானது கற்சக்கரத்த்தால் பூட்டப்பட்டு மார்ச் மாத பௌர்ணமி நாளில் தேர்திருவிழா நடக்கிறது.

விழாக்கள்[தொகு]

இக்கோயிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. குறிப்பாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மிகச்சிறப்பாக வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாசிமாதம் பௌர்ணமியன்று ஆண்டு விழாவாக தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது.[3] இதையோட்டி ஒன்பது நாட்கள் விழா நடத்தப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

கிருஷ்ணகிரி நகரில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் வேப்பனப்பள்ளி உள்ளது. வேப்பனப்பள்ளியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, சாலையை ஒட்டியவாறு கோயிலின் தோரணவாயில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "வேப்பனஹள்ளியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமர் கோயில்". செய்திக் கட்டுரை. தினகரன். 28 ஏப்ரல் 2015. Archived from the original on 2015-05-09. பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 132-133. 
  3. "வேப்பனஅல்லி ஸ்ரீகோதண்டராமர் கோயில் தேர்த் திருவிழா". செய்தி. தினமணி. 3 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2018. {{cite web}}: Check date values in: |date= (help)