கோண்டு ஓவியக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோண்டு ஓவியக்கலை மத்தியப் பிரதேசம்

கோண்டு ஓவியக்கலை என்பது இந்தியாவின் பெரும் மக்கள் தொகை கொண்ட திராவிட இனப் பழங்குடி மக்களான கோண்டு மக்களின் ஓவியக்கலையாகும். இந்த மக்கள் வட இந்தியாவின கிழக்கு மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம்,தெலுங்கானா ஒடிசா ஆகிய மாநிலங்களில் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு காலத்தில் கோண்டு மக்களின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தப் பகுதி கோண்ட்வானா நாடு என அழைக்கப்பட்டது.

கோண்டு ஓவியம் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. கோண்டு இனமக்கள் காற்கால மக்களாக குகைகளில் வாழ்ந்தபோது அவர்கள் பாறைகளில் ஓவியங்கள் வரைந்ததன் தொடர்ச்சிதான் இந்தக் கோண்டு சுவர் ஓவியங்கள் என வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். இந்த ஓவியங்களில் அவர்கள் தங்கள் பகுதிகளின் மலர்கள், மரங்கள், விலங்குகள் போன்றவற்றின் இயற்கை உருவங்களை பெருபாலும் சித்தரிக்கிறார்கள்.[1] மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள இணைப்பை காட்டும்விதமாகவும், தங்களின் பெண் தெய்வங்களின் உருவங்களையும் இவ்வோவியங்களில் வரைகிறார்கள்.

கோண்டு பழங்குடியினர் தங்கள் சமய வழிபாட்டுச் சடங்கு, திருமணம் போன்ற நிகழ்வின்போதும் வீட்டுச் சுவர்களை ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்துகின்றனர். இந்த ஓவியங்கள், தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கும் என்னும் நம்பிகையும் இவர்களுக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது. இந்த ஓவியங்களுக்கான வண்ணங்களை கரி, மண், தாவரங்கள், மாட்டுச் சாணம் போன்ற இயற்கையான பொருட்களில் இருந்து எடுக்கிறார்கள். இன்றைக்குள்ள கோண்டு ஓவியங்கள் அபராமான கற்பனை வளத்துடன் வரையப்படுகிறன. மரத்தில் மீன்கள் காய்ப்பதுபோல, உலக முழுமைக்குமான ஒரு தாயாக ஒரு மானைச் சித்திரிப்பதுபோல எனப் பல விதங்களில் வரையப்படுகின்றன. இன்றைக்கு இந்த ஓவியங்கள் கோண்டு பகுதியையும் தாண்டி இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. நவீன கட்டுமானக் கலையில் உள் அலங்காரமாகவும் பயன்படுகிறது. [2]

இந்த ஓவியஙகள் உலகப்புகழ் பெறக் காரணமாக இருந்தவர். மத்தியப் பிரதேசத்தில் பிறந்த கோண்டு இனத்தவரான ஜங்கர் சிங் ஷியாம் (1962-2001) என்பவர் ஆவார். இவரால் இந்த ஓவியங்கள் சுவர்களில் இருந்து கேன்வாஸ் துணிகளுக்கு புதிய பாணியில் இடம்பெயர்து ஓவிய கண்காட்சிகளில் இடம்பெற்று உலகப் புகழ்பெற்றன. இவோவியக்கலையை இவர் பலருக்கு கற்பித்தார். இவர்கள் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர்களாக இந்த ஓவியபாணியில் உருவாக்கினர் அவர்களில் சிலர் : ஜங்கர் சிங்கின் மனைவியான, நன்குஷா ஷியாம்,[3] இவரது பிள்ளைகளான ஜபானி, மயான்க்,[4] இவரின் அண்டை வீட்டாரான பாஜ்சு ஷியாம்,[5] · [6] · [7] · [8] வென்கட் சிங் ஷியாம்,[9] இவரின் தங்கை துர்கா பாய்,[10] இவரின் மைத்துனர் சுபாஷ் வியாம் மற்றும் ராம்சிங் உர்விட்[4] · .[11] ஆகியோராவார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "பேசும் பொற்சித்திரங்கள்". தி இந்து (தமிழ்) (2016 -சூன் 4). பார்த்த நாள் 4 சூன் 2016.
 2. "சுவர் ஓவியங்கள்- 5 கோண்டு: ஒளி மங்கா ஓவியம்". தி இந்து (தமிழ்) (மே, 7, 2016). பார்த்த நாள் 7 மே 2016.
 3. Bulli & The Tiger - Shalina Reys and Nankusia Shyam - Pratham Books - 2010 - ISBN 9789350220177
 4. 4.0 4.1 Freedom : Sixty Years After Indian Independence, illustrations: Mayank Kumar Shyam, Ram Singh Urveti, Bhuri Bai ... - Art and Heritage Foundations - 2007 - ISBN 978-8190485807
 5. La petite sirène - Gita Wolf et Sirish Rao, illustrations: Bhajju Shyam - Syros - 2009 - ISBN 9782748508413
 6. La vie nocturne des arbres - Bhajju Shyam, illustrations: Durge Bai et Ram Singh Urveti - Acte Sud Junior - 2013 - ISBN 978-2-330-02132-0
 7. Mon voyage inoubliable - Bhajju Shyam, illustrations: Bhajju Shyam - Syros - 2014 - ISBN 9782748514902
 8. Alone in the Forest - Gita Wolf & Andrea Anastasio - illustrations: Bhajju Shyam - Tara Books - 2012 - ISBN 978-81-923171-5-1
 9. Finding My Way - A Gondwana Journey - Venkat Raman Singh Shyam with S. Anand - navayana 2012 - A draft sample for Frankfurt Buchmesse 2012
 10. Book of Rhyme - Gita Wolf, illustrations: Durga Bai - taraBOOKS - 2010 - ISBN 978-93-80340-06-7
 11. I saw a Peacock with a fiery Tail - illustrations: Ram Singh Urveti - Tara Books - 2011 - ISBN 978-93-80340-14-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோண்டு_ஓவியக்கலை&oldid=2696758" இருந்து மீள்விக்கப்பட்டது