கொ. மா. கோ. இளங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொ.மா.கோ.இளங்கோ

கொ. மா. கோ. இளங்கோ (பிறப்பு: அக்டோபர் 24, 1972) தமிழக சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். சிறுவர்களுக்காக பல தமிழ் நூல்களை எழுதியுள்ளார். இவரது 'ஜிமாவின் கைபேசி' சிறுவர் அறிவியல் புனைகதை நூலுக்கு த.மு.எ.க.ச விருதும், திருப்பூர் இலக்கிய விருதும் பெற்றவர்.  'எட்டுக்கால் குதிரை' சிறுவர் நாவலுக்கு த.க.இ.பெருமன்ற விருது பெற்றவர். இயந்திரவியலில் இளநிலையும், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் சிமெண்ட் ஆலை கட்டுமானத்துறை ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

இவரது நூல்கள் ஆங்கிலம்,தெலுங்கு,இந்தி மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

ஜெர்மன் நாட்டைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கி வரும் ‘அனைத்துலகத் தமிழ்க் கல்வி பண்பாடு அறிவியல் மேம்பாட்டு இணையம்’ உருக்கியுள்ள புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தின் கீழ், ஐந்தாம் வளர்நிலைத் தமிழ்ப் பாடப்புத்தகத்தில் ‘செட்டை கிழிந்த வண்ணத்துப்பூச்சி’ என்ற இவரது சிறுவர்கதையும், 6ம் நிலை தமிழ்ப் பாடத்தில் ‘உப்பளத்துக்கு வந்த வெள்ளையானை’ எனும் சிறுவர் கதையும், 7ம் வளர்நிலைப் பாடத்தில் ‘கதிரவனை ஒளித்த சிறுமி எனும் சிறுவர் கதையும் இடம்பெற்றுள்ளன. உலக அளவில் 11 நாடுகளைச் சேர்ந்த 36,000 பள்ளி மாணவர்கள் பயன் பெறுவர்.

பட்டங்களும் விருதுகளும்[தொகு]

 • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் - கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது - சிறந்த குழந்தை இலக்கிய நூல் - ஜிமாவின் கைபேசி (2014)
 • இராஜபாளையம் மணிமேகலை மன்றம் – சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்பாளி -2015: ஐஸ்வர்யா இலக்கிய விருது
 • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – தவத்திரு. குன்றக்குடி அடிகளார் நினைவு விருது - 'எட்டுக்கால் குதிரை' (2014)
 • திருப்பூர் இலக்கிய விருது -2016, சிறந்த சிறுவர் இலக்கிய நூல் - ‘ஜிமாவின் கைபேசி’
 • திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது- 2015 சிறந்த சிறுவர் இலக்கியப் புத்தகம் – மக்கு மாமரம்
 • நெய்வேலி புத்தகக் கண்காட்சி (நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்) - சிறந்த எழுத்தாளர் விருது -2017

வெளியிட்ட சிறுவர் புதினங்கள்[தொகு]

 • சூரியனை ஒளித்து வைத்த சிறுமி (புக்ஸ் ஃபார் சில்ரன்- பாரதி புத்தகாலயம்-2019)
 • நட்சத்திரக் கண்கள் (பாரதி புத்தகாலயம், 2018)
 • சஞ்சீவி மாமா (பாரதி புத்தகாலயம், 2016)
 • மந்திரக் கைக்குட்டை (பாரதி புத்தகாலயம், 2016)
 • பஷிராவின் புறாக்கள் (பாரதி புத்தகாலயம், 2016)
 • பிரியமுடன் பிக்காஸோ (என்.சி.பி.ஹெச் வெளியிடு, 2016)
 • ஓநாய் கண்டறிந்த உண்மை (பாரதி புத்தகாலயம்- 2017)
 • ஜிமாவின் கைபேசி (பாரதி புத்தகாலயம்-2014)
 • எட்டுக்கால் குதிரை (பாரதி புத்தகாலயம்-2014)
 • குட்டி டாக்டர் வினோத் (ராஜேஸ்வரி புத்தக நிலையம்-1996)
 • ஆயிரங்கால் பூச்சி (பாலா பதிப்பகம் -2002)
 • தேனென இனிக்கும் தீஞ்சுவை கதைகள் (பிரபாத் புக் ஹவுஸ்– 2006)

இவற்றை விட ஏராளமான சிறுவர் நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொ._மா._கோ._இளங்கோ&oldid=2880810" இருந்து மீள்விக்கப்பட்டது