உள்ளடக்கத்துக்குச் செல்

கொஸ்டா கொன்கோர்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொஸ்டா கொன்கோர்டியா
கப்பல்
பெயர்: Costa Concordia
உரிமையாளர்: கார்னிவல் கார்ப்பரேசன்
இயக்குனர்: கொஸ்டா குரூசஸ்
பதியப்பட்ட துறைமுகம்: இத்தாலி ஜெனோவா, இத்தாலி
பணிப்பு: 19 சனவரி 2004
கட்டியோர்: ஃபின்காண்டியெரி, இத்தாலி
செலவு: 450 மில்லியன்
துறையெண்: 6122
வெளியீடு: 2 செப்டம்பர் 2005
பெயரிடப்பட்டது: 7 சூலை 2006[1]
வாங்கியது: 29 சூன் 2006
பணிக்காலம்: ஜூலை 2006
பணிவிலக்கம்: 13 சனவரி 2012
அடையாளம்: Call sign: IBHD
IMO number: 9320544
MMSI no.: 247158500
நிலை: இத்தாலியின் கிகிலியோ தீவில் பகுதியாக மூழ்கியது.
குறிப்பு: [2][3]
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:கொன்கோர்டியா வகை உல்லாசப்பயணிகள் கப்பல்
நிறை:1,14,500 GT
நீளம்:290.20 m (952 அடி 1 அங்)
வளை:35.50 m (116 அடி 6 அங்)
Draught:8.50 m (27 அடி 11 அங்)
பொருத்திய வலு:6 × வார்ட்சிலா டீசல் எஞ்சின்கள், 75,600 கிலோwatts (101,400 hp)
விரைவு:சேவை: 21.5 knots (39.8 km/h; 24.7 mph)
உயர்: 23 knots (43 km/h; 26 mph)
கொள்ளளவு:3,700 பயணிகள்
பணியாளர்:1,100
குறிப்புகள்:[3][4]

கொஸ்டா கொன்கோர்டியா (Costa Concordia) என்பது இத்தாலியைச் சேர்ந்த கொஸ்டா குரூசசு நிறுவனத்தின் ஒரு உல்லாசப் பயணிகள் கப்பல் ஆகும். ஐரோப்பிய நாடுகளிடையே இணக்கம், ஒற்றுமை, மற்றும் அமைதி ஆகியவற்றைப் பேணும் முகமாக இக்கப்பலுக்கு கொன்கோர்டியா என்ற பெயர் வைக்கப்பட்டது. 2006 சூலையில் சேவைக்கு விடப்பட்ட இக்கப்பல் 114,500 தொன் எடையுள்ளது. இதுவே இத்தாலியில் அமைக்கப்பட்ட கப்பல்களில் மிகப் பெரியதாகும்.

கடலில் மூழ்கிய கொன்கோர்டியா

2012 சனவரி 13 ஆம் நாள் பன்னாட்டுப் பயணிகளை நடுநிலக்கடலுக்கு ஏற்றிச் சென்ற இக்கப்பல் இத்தாலியின் கிகிலியோ தீவுக்கருகில் பாறை ஒன்றுடன் மோதி மூழ்கியது. இதனை அடுத்து இக்கப்பலில் பயணம் செய்த 4,000 பேர் வரையில் வெளியேற்றப்பட்டனர். பலர் உயிர்க்காப்புப் படகுகள் மூலம் கரைக்கு வந்து சேர்ந்தனர். சிலர் நீந்தியே கரையை அடைய வேண்டியிருந்தது. 40 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர்[5][6].

மீட்பு

[தொகு]

950 அடி நீளமுள்ள இக்கப்பல் பல நாட்கள் சாய்ந்தே இருந்தது. 17.09.2013 அன்று 5 கோடிகள் செலவு செய்து 19 மணிநேரப் போராட்டத்திற்குப்பின் பல இழுவை கப்பல்களின் உதவியால் மீட்கப்பட்டது. இதன் எடை 1,15லட்சம் டன் ஆகும். இக்கப்பலின் சொந்தக்காரர் இக்கப்பல் மறுபடியும் பயணத்திற்கு விடப்படமாட்டாது, பல பாகங்களாக உடைத்து விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தார். விபத்தின் போது, இந்த கப்பலில், 4,000 பயணிகள் இருந்தனர்; இதில் 32 பேர் உயிரிழந்தனர்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Eva Herzigova Was The Godmother Of the Costa Concordia". Archived from the original on 2012-01-17. பார்க்கப்பட்ட நாள் 2012-01-15.
  2. Fincantieri(19 January 2004). "Costa Crociere Orders A New Ship From Fincantieri With An Investment Of Around 450 Million Euros". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2 September 2011.
  3. 3.0 3.1 "Company Profile". Costa Cruises. 2011. Archived from the original on 8 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 2 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Advanced Masterdata for the Vessel Carnival Concordia". VesselTracker. 2011. பார்க்கப்பட்ட நாள் 1 September 2011.
  5. "Cruise disaster: captain arrested as three confirmed dead and 69 passengers still missing". த டெய்லி டெலிகிராஃப். 14 சனவரி 2012 இம் மூலத்தில் இருந்து 2012-01-14 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/64gzphQci?url=http://www.telegraph.co.uk/news/worldnews/europe/italy/9014743/Cruise-disaster-three-confirmed-dead-and-69-passengers-still-missing.html. பார்த்த நாள்: 14 சனவரி 2012. 
  6. "40 passengers still unaccounted for"[தொடர்பிழந்த இணைப்பு] (14 சனவரி 2012) FOCUS News Agency
  7. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் நிமிர்த்தப்பட்ட இத்தாலிய கப்பல்

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொஸ்டா_கொன்கோர்டியா&oldid=3929306" இலிருந்து மீள்விக்கப்பட்டது