உள்ளடக்கத்துக்குச் செல்

கொலைகாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொலைகாரன் (Kolaigaran) 2019 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும்.[1][2] 2012 ஆம் ஆண்டில் வெளியான லீலை திரைப்படத்தினை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் என்பவர் இந்தத் திரைப்படத்தினை இயக்கினார். விஜய் ஆண்டனி, அர்ஜுன் ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். நாசர், சீதா ஆகியோர் துணைக் கதாப்பத்திரத்தில் நடுத்துள்ளனர். சைமன் கிங் என்பவர் இசையமைத்துள்ளார். சூன் 5, 2018 இல் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.[2][3]

சூன் 7, 2019 இல் தெலுங்கு ஒலிச்சேர்க்கையோடு இந்தத் திரைபப்டம் வெளியானது.[4] நேர்மறையான விம்ர்சனங்களைப் பெற்ற இந்தத் திரைப்படம் வணிக ரீதியிலும் வெற்றியடைந்தது.[5]

இந்தத் திரைப்படம் ஜப்பானியத் திரைப்படமான சந்தேக நபர் என்பதனைத் தழுவி எடுக்கப்பட்டது. அது டிவோசன் ஆஃப் சஸ்பெக்ட் எனும் புதினத்தினைத் தழுவி எடுக்கப்பட்டது ஆகும்.[6][7][8][9][10][11][12]

கதைச் சுருக்கம்[தொகு]

பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்படுகிறார். பின் பிரபாகரனும் ஆசிமா நர்வாலும் பக்கத்து வீட்டில் குடியிருக்கின்றனர். தினமும் காலையில் இருவருமே ஒரே நேரத்தில் வெளியே வந்து சந்திக்கின்றனர். இதற்கிடையில் சென்னையில் மற்றொரு கொடூரமான கொலை நிகழ்கிறது. அந்தக் கொலை வழக்கினை விசரிக்கும் பொறுப்பு கார்த்திகேயனிடம் வருகிறது. அங்கு கிடைக்கும் சில தடயங்களை வைத்து அவர் வழக்கினை விசாரிக்கிறார். அதன் பின்னர் விஜய் ஆண்டனியின் மீது சந்தேகம் வருவதால் அவரின் பின்னணி என்ன என்பதனைத் தெரிந்துகொள்கிறார். மேலும் அந்தக் கொலையினை தான் செய்ததாக விஜய் ஆண்டனி சரணடைகிறார். உண்மையில் அந்தக் கொலையினை யார், எதற்காக செய்தார்கள் என்பது இறுதிக் கதையாகும்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இந்தப் படத்தின் முதல் சுவரொட்டி சூன் 5, 2018 இல் வெளியானது. அதில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.[13] 2012 ஆம் ஆண்டில் வெளியான லீலை திரைப்படத்தினை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் என்பவர் இந்தத் திரைப்படத்தினை இயக்கினார். இவர் விஜய் ஆண்டனியின் நண்பராவார். திமிரு பிடிச்சவன் எனும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்த வேளையில் இந்தத் திரைப்படத்தில் இவர் ஒப்பந்தமானார்.[14] இரும்புத்திரை திரைப்படத்தில் ஒப்பந்தமான சமயத்தில் இந்தத் திரைப்படத்தில் அர்ஜுன் ஒப்பந்தமானார்.இந்திய-ஆத்திரேலிய விளம்பர வடிவழகியான ஆஷிமா நர்வால் இந்தத் திரைப்படத்தின் முக்கிய பெண் கதாப்பத்திரத்தில் நடிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டார்.[15] இவரின் கதாப்பத்திரம் பற்றிய தகவல் வெளியான போதும் அர்ஜூன் மற்றும் விஜய் ஆண்டனியின் கதாப்பாத்திரம் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.[16] டிசம்பர் 29, 2018 இல் படத்தின் பகுதி படப்பிடிப்பு முடிந்ததாக தகவல்கள் வெளியானது. இந்தப் படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் சென்னையிலேயே நடந்தது.[17]

போஃப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இந்தத் திரைப்படம் விநியோகம் ஆனது.[18] .[19]

ஒலிப்பதிவு[தொகு]

2018 ஆம் ஆண்டில் வெளியான சத்யா திரைப்படத்திற்கு இசையமைத்த சைமன் கே. கிங் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்தார். மேலும் மற்ற இசையமைப்பாளரின் இசையில் விஜய் ஆண்டனி நடிப்பது இது இரண்டாவது முறையாகும்.

வெளியீடு[தொகு]

சூன் 7, 2019 இல் தெலுங்கு ஒலிச்சேர்க்கையோடு இந்தத் திரைப்படம் வெளியானது.[4] நேர்மறையான விம்ர்சனங்களைப் பெற்ற இந்தத் திரைப்படம் வணிக ரீதியிலும் வெற்றியடைந்தது.[5].[20]

குறிப்புகள்[தொகு]

 1. "Kolaigaran to release on June 5th". Times of India.
 2. 2.0 2.1 "Vijay Antony's 'Kolaigaran' gets a U/A certificate". Times of India.
 3. Ratda, Khushboo. "Vijay Antony and Arjun Sarja starrer Kolaigaran first look is sure to leave you excited". Pinkvilla. பார்க்கப்பட்ட நாள் 2018-12-29.
 4. 4.0 4.1 https://www.123telugu.com/reviews/killer-telugu-movie-review.html
 5. 5.0 5.1 https://www.ibtimes.co.in/box-office-collection-kolaigaran-overpowers-bharat-impacts-ngk-business-799295
 6. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/kolaigaran/movie-review/69686980.cms
 7. https://www.thehindu.com/entertainment/movies/kolaigaran-review-a-killer-tale/article27648504.ece
 8. https://www.huffingtonpost.in/entry/kolaigaran-movie-review-vijay-antony_in_5cfa611de4b06af8b5074775
 9. https://www.hindustantimes.com/regional-movies/kolaigaran-movie-review-this-vijay-antony-starrer-is-a-well-executed-investigative-thriller/story-vFeCXFfIxbZi8Nt9TeV47N.html
 10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-06-08. பார்க்கப்பட்ட நாள் 2019-12-07.
 11. https://indianexpress.com/article/entertainment/movie-review/kolaigaran-movie-review-rating-5769937/
 12. https://www.news18.com/news/movies/kolaigaran-movie-review-you-wont-be-able-to-guess-the-culprit-2176385.html
 13. "'Kolaigaran' first look: Vijay Antony and Arjun Sarja's film poster looks impressive - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2018-12-29.
 14. "Vijay Antony's next is Kolaikaran". Deccan Chronicle. 2018-05-17. பார்க்கப்பட்ட நாள் 2018-12-29.
 15. "Meet Ashima, Vijay Antony's heroine in Kolaigaran - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2018-12-29.
 16. "கொலைகாரன் படத்தில் வில்லன் மட்டுமல்ல ஹீரோவுக்கும் சர்ப்ரைஸ் வைத்த படக்குழு…". samayam Tamil. 2018-06-05. பார்க்கப்பட்ட நாள் 2018-12-29.
 17. Kolaigaran Soundtrack List
 18. https://en.wikipedia.org/wiki/G._Dhananjayan
 19. https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/vijay-antonys-kolaigaran-tamilnadu-theatrical-rights-acquired-by-dhananjayans-bofta.html
 20. https://www.mirchi9.com/reviews/killer-telugu-movie-review/
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலைகாரன்&oldid=3709466" இலிருந்து மீள்விக்கப்பட்டது