உள்ளடக்கத்துக்குச் செல்

கொரிய முப்பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐந்தாம் நூற்றாண்டு முடிவில் கொரிய முப்பேரரசு

கொரிய முப்பேரரசு (hangul=삼국시대|hanja=三國時代, Three Kingoms of Korea) என்பது கி. பி. முதல் பத்து நூற்றாண்டுகளில் கொரிய தீபகற்பத்தையும் மஞ்சூரியாவின் சில பகுதிகளையும் ஆண்ட கோகுர்யியோ, பைக்யே மற்றும் சில்லா ஆகிய மூன்று நாடுகளைக் குறிக்கும். கி.மு.57 லிருந்து கி.பி 668ல் சில்லா கோகுர்யேயை வெல்லும் வரை உள்ள காலகட்டம், கொரிய முப்பேரசின் காலகட்டமாக வழங்கப்படுகிறது. கி.பி 668க்கு பின் கொரிய தீபகற்பம் வடக்கு மற்றும் தெற்கு பகுதியாகப் பிரிந்தது. வடக்கு பகுதி பல்ஹே அரசின் கட்டுப்பாட்டிலும் தென்பகுதி ஒருங்கிணைந்த சில்லாவின் கட்டுப்பாட்டிலும் இருந்தன.

கோஜோசியோன் வீழ்ந்தபிறகு முப்பேரரசு அமைய ஆரம்பித்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. கோஜோசியோன் வீழ்ந்தபின், உருவாகியிருந்த சிறுசிறு நாடுகளையும் பகுதிகளையும் விரைவில் இவ்வரசுகள் தங்களுள் இணைத்துக்கொண்டன. ஹான் வம்ச அரசர்கள் தற்காலத்தில் லியோநிங்[1] என்றழைக்கப்படுகின்ற பகுதியில் நான்கு மாநிலங்களை உருவாக்கியிருந்தனர். அவற்றுள் மூன்று பிரவுகள், புதிய கொரிய அரசுகளால் மிக விரைவில் அழிக்கப்பட்டன. நான்காம் மாநிலம கோகுர்யியோவினால் கி.பி 313லிலும் அழிக்கபட்டது.

கி. பி மூன்றாம் நூற்றாணடின் முடிவில் இம்மூன்று அரசுகளும் தங்கள் முழு வளர்ச்சியை அடைந்த மூன்று பேரரசுகளாக உருவாயின. பெய்க்யேயும் சில்லாவும் பல்வேறு உட்பூசல்கள், குழுக்கள், அரசாங்க மாறுதல்களைக் கடந்து ஒருங்கிணைந்து உருவாகின. கோகுர்யியோ அடுத்த நாடுகளான புயே, ஓக்யோ டோங்கயோ மற்றும் கொரிய நிலப்பகுதியின் வடக்கிலுள்ள பல்வேறு குறுநாடுகளையும் மஞ்சூரியாவையும் ஆக்கிரமித்து உருவானது.

காலச்சார அளவிலும் மொழியிலும் மூன்று நாடுகளும் ஒரே அடையாளத்தைக் கொண்டிருத்தன. ஆரம்பத்தில் மந்திர சூனியவாத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும், பிற்காலங்ககளில் சீனத்தின் கன்பூசியம் மற்றும் டாவொ மதங்களின் தாக்கம் இவற்றினூடே அதிகரித்தது. நான்காம் நூற்றாண்டு வாக்கில் கொரிய நிலப்பரப்பில் புத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டது. வேகமாகப் பரவி, சிறிது காலம் முப்பேரரசுகளின் ஆட்சி மதமாகவும் சில காலம் இருத்தது.

கோகுர்யியோ

[தொகு]
கோகுர்யியோ ஓவியம்

கோயோசானின் வீழ்ச்சிக்கு பிறகு கோகுர்யியோ யாலு ஆற்றின் வட மற்றும் தென் கரைகளில் உருவானது. சீன ஆவணங்களில் கோகுர்யியோ பற்றிய முதல் குறிப்பு கி.மு 75ல் காணக்கிடைக்கிறது. அதில் கோகுர்யியோ ஹான் வம்சாவளியினர் ஒரு மாநிலத்தை உருவாக்கிய இடமாக குறிப்பிடபடுகின்றது. முப்பேரசின் முதலில் உருவாகிய பேரரசாக கோகுர்யியோ உருவானதற்கான ஆவணங்கள் உள்ளன.

கேகுர்யியோ முன்னாடுகளில் ஆகப்பெரிய நாடாக வளர்ச்சியடைந்தது. பல்வேறு இடங்களை தலைநகராகக் கொண்டு இருந்தது. யாலுவுக்கு வடக்கேயும் பின் நான்க்ரங்கிலும்(樂浪: சீனம்:லிலாங் ), தற்போதைய வடகொரிய தலைநகர் யாங்யாங்கின் ஒருபகுதியையும் சில காலங்கள் தலைநகரங்களாக கொண்டு ஆட்சி நடந்தது. ஆரம்பத்தில், சீனாவின் எல்லையில் இருந்தது. பின் கி.பி 313ல் மஞ்சூரிய நிலப்பரப்பில் லீலாங் படைத்தளத்தையும் வீழ்த்தியது. கி.பி 372ல் சீன கலாச்சர தாக்கத்தினால் புத்தமதத்தை அரசாங்க மதமாக ஏற்றுக்கொண்டது.

ஐந்தாம் நூற்றாண்டில் க்வாங்கெட்டோ காலத்திலும் அவரின் மகனான ஜாங்கஸூ வின் காலத்திலும் இப்பேரரசு மஞ்சூரியாவை வீழ்த்தியதையடுத்து மிகப்பெரும் புகழடைந்தது. அடுத்த ஒரு நூற்றாண்டு காலத்திற்கு கோகுர்யியோவே கொரிய நிலப்பரப்பின் பலம்பொருந்திய நாடாக இருந்தது.[2] கோகுர்யியோ பின்பு லியடோங் சமவெளிப்பகுதியையும் பின் தற்காலத்திய சியோல் பகுதியையும் ஆக்ரமித்தது. கொரிய இனம், சீன இனம் மற்றும் டுங்கு இன மக்களையும் கோகுர்யோ அரசர்கள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சுயி அரசர்கள் (சீனம்) ஆட்சிகாலத்திலும் பின் டாங் அரசர்கள் காலத்திலும் தொடர்ந்து சீனத்தாக்குதலுக்கு உள்ளாகி வந்தது. கி.பி 668 வாக்கில் சில்லா-டாங் படைகள் பிடிக்கும் வரை கோகுர்யியோ தனிநாடாக இருந்தது.

பைக்யே

[தொகு]

பைக்யே மாஹான் குழுமத்தின் ஒரு அங்கத்தினரால் உருவாக்கப்பட்டது. கோகுர்யியோவின் நிறுவனர்களின் வாரிசுச் சண்டையால் துரத்தப்பட்டவரின் இரண்டு மகன்களால் பைக்யே இன்றைய சியோல் பகுதியியில் உருவாக்கப்பட்டது. மற்ற மஹான் சிறு நாடுகளை ஆக்ரமித்து நாலாம் நூற்றாண்டில் கொரிய தீபகற்பத்தின் மேற்குப் பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் பைக்யே வைத்திருந்தது. குர்க்யியேயின் தொடர் தாக்குதலினால் தலைநகரை உங்கயின் தெற்கேயும் பின் தொடர்ந்து அதற்கும் தெற்கே சாபியிலும் இன்றைய புயே மாகாணத்திலும் நகற்றிக்கொண்டிருந்தது.

டாம்ன அரசாங்கத்திலும் , ஜேஜூ தீவிலும் தன் அரசியல் தாக்கத்தை தொடர்ந்து பைக்யே கொண்டு இருந்தது. பைக்யே டாம்னாவுடன் நெருக்கமான உறவைக்கொண்டு இருந்தது. பைக்யேவின் மத, கலை, கலாச்சார அளவில் குர்கேயேவும் சில்லாவும் தாக்கத்தை ஏற்படுத்தியே வந்து இருக்கிறது.

புத்தமதம் பைக்யேவில் 384ல் குர்க்யேவிலிருத்து நுழைந்தது. பைக்யே அதை வரவேற்கவே செய்தது.[2] பின் பைக்யே கலாச்சார உறவுகளையும் சூன எழுத்துக்களையும், புத்தமதத்தையும் ஜப்பானில் பரப்ப பெருமளவில் பங்காற்றியது.[2][3] பைக்யே சில்லாவும் டாங் பேரரசுகளும் சேர்ந்து பைக்யேவை பிடித்து கி.பி 660 வாக்கில் பைக்யே பேரரசை முடிவுக்கு கொண்டு வந்தது.

சில்லா

[தொகு]
Bangasayusang, 7th century

கி.மு 57ம் வருடத்திய கொரிய ஆவணங்களின் படி, ஜின்ஹான் குழுமங்கள் தீபகற்பத்தின் தென்கிழக்கு பகுதியில் சியோராபியோல் (பிற்காலத்தில் சில்லா)பகுதியில் இணைந்து உருவானதாக தெரிவிக்கின்றன. சாமுக் சாகி எனப்படும் ஆவணத்தொகுப்புகள் சில்லா முதன்முதலில் உருவானதாக தெரிவிக்கின்றது. ஆனால் மற்ற எழுத்து மற்றும் அகழ்வாராய்ச்சிகளில் சில்லா முப்பேரரசில் கடைசியாக அமைந்த பேரரசாக அறியமுடிகிறது.

சாரோ என்ற பெயரில் முதலில் அழைக்கப்பட்ட இவ்வரசு கி.பி. 503ல் சில்லா பெயர் மாற்றமடைந்தது.ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் கயா குழும நாடுகளை(கயா முன்பே பியோன்ஹான் குழுமத்தை பிடித்துவிட்டிருந்தது) ஆக்ரமித்தது. கோகுர்க்யியோவும் பைக்யேவும் இதைத் தொடர்ந்து இணைந்து சில்லைவை எதிர்க்க ஆரம்பித்தது. இணைந்த படையெடுப்புகளை எதிர்கொள்ள சில்லா டாங் பேரரசுடன் மேலும் ஆழமான உறவை கொண்டிருந்தது. மஞ்சள் கடற்பகுதியின் ஆக்ரமிப்பின் மூலம் டாங் அரசுடன் நேரடி தொடர்புகளை வைத்திருந்தது. ஆனாலும் பிற்காலத்தில் கோகுர்யியோவையும் பைக்யேவைம் பிடித்தபின் சில்லா யாங்யாங்குக்கு தெற்குள்ள பகுதிகள் முழுவதையும் தன்பாட்டுக்குள் கொண்டு வந்து டாங் பேரரசின் படையை துரத்தி முழு பலத்துடன் ஆட்சி நடத்திவிந்தது. சில்லாவின் தலைநகரம் சியோராபியோல்( தற்போதைய க்யோங்யூ). புத்தமதம் அரச மதகாக கி.பி 528ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கோகுர்யியோவிலும் பைக்யேவிலும் சீனத்தாக்கம் அதிகம் இருந்தாலும் சில்லாவில் வடநில மக்களின் ஆதிவாசிகளின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆவணங்கள், கலைப்பொருட்கள் தங்கவேலைப்பாடுகள் போன்றவை சில்லாவில் இந்த மாற்றத்தை பதிவு செய்திருக்கின்றன.

மற்ற நாடுகள்

[தொகு]

மற்ற சிறு நாடுகள் முப்பேரரசின் காலத்திலும் அதற்கு முன்னுப் பின்னும் இருந்து வந்தன.

ஒரு கயா போர்வீரன்.

முப்பேரரசின் முடிவு

[தொகு]

சீனாவுடன் சேர்ந்து டாங் வம்சாவளியினர் ஆட்சியில் சில்லா கோர்கோயவை கி.பி 662 ஆம் ஆண்டு கைப்பற்றியது, முப்பேரரசுகளை முடிவுக்கு கொண்டு வந்தது. இதறகு முன்னரே, கி.பி.562ல் கயாவையும் 660ல் பைக்யேவையும் சில்லா ஆக்கிரமிப்பு செய்திருந்தது.

மேற்குறிப்புகள்

[தொகு]
  1. http://www.upkorea.net/news/photo/5880-2-5623.pdf
  2. 2.0 2.1 2.2 Korea's Three Kingdoms
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-13. பார்க்கப்பட்ட நாள் 2010-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரிய_முப்பேரரசு&oldid=3551786" இலிருந்து மீள்விக்கப்பட்டது