கொன்ச்செ கவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொன்ச்செ கவாமி (Ghoncheh Ghavami) பிரித்தானிய-ஈரானிய சட்டப் பட்டதாரி ஆவார். இலண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய, ஆபிரிக்கக் கல்வி நிறுவனத்தில் (SOAS, University of London) சட்டம் படித்தார். ஈரானில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு செல்லும் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு எவின் சிறைச்சாலையில் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

கவாமி 1989இல் பிறந்தவர். இவருக்கு ஓர் அண்ணன் உள்ளார். இலண்டனில் உள்ள செப்பர்டு புஷில் 2014இல் வாழ்ந்து வந்தார். இவருக்கு பிரித்தானியா மற்றும் ஈரான் நாட்டுக் குடியுரிமை உள்ளது. இலண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய, ஆபிரிக்கக் கல்வி நிறுவனத்தில் (SOAS, University of London) சட்டம் படித்தார். ஈரானில் சிறுவர்களின் எழுத்தறிவிற்கான அறக்கொடை ஒன்றில் பணிபுரிந்தார்.[1]

கைதும் சிறைவாசமும்[தொகு]

சூன் 20, 2014இல் தெகரானின் ஆசாதி விளையாட்டரங்கில் கைப்பந்தாட்ட ஆட்டமொன்றிற்கு உள்ளே நுழைய முற்படும்போது கைது செய்யப்பட்டார். அவரும் மற்ற பெண்ணுரிமையாளர்களும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு சமனான அணுக்கம் கோரி போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.[2] ஈரானில் விளையாட்டிடங்களில் பெண்கள் ஆண் பார்வையாளர்களுடன் இடைவினையாற்றுவது சட்டத்திற்கு புறம்பானது. இந்தச் சட்டம் பெண் பார்வையாளர்களை ஆண்களின் ஆபாசச் செயல்களிலிருந்து காப்பதற்காக இயற்றப்பட்டது. போராட்டக்காரர்கள் இந்தச் சட்டத்தை மீறினர்; மேலும் சட்டத்தின்படி பெண்கள் கருநிற முகமூடிகளை (ஹிஜப்) அணிய வேண்டியிருக்க இவர்கள் வெள்ளை வண்ண தலைக்குட்டைகளை அணிந்திருந்தனர்.[3]

கவாமி நுழைவாயில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஒரு வாரம் கழித்து அவர் தனது உடமைகளை சேகரிக்க திரும்பி வந்தபோது மீண்டும் கைது செய்யப்பட்டு எவின் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தற்போது தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனிச்சிறையில் 100 நாட்களுக்கு மேலாக அடைக்கப்பட்டதை எதிர்த்து அக்டோபர் 1, 2014 அன்று உண்ணாநோன்பு துவங்கினார்.[4]

ஈரானின் நீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் கவாமி விளையாட்டரங்கினுள் நுழைய முற்பட்டதற்காக கைது செய்யப்படவில்லை என்றும் "ஆட்சிக்கு எதிரான பரப்புரைக்காக” வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் கூறினார். [3]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொன்ச்செ_கவாமி&oldid=2693784" இருந்து மீள்விக்கப்பட்டது