கொசு மீன்
கொசு மீன் | |
---|---|
![]() | |
பெண் மீன் | |
![]() | |
ஆண் மீன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | அக்டினோட்டெரிகீயை |
வரிசை: | Cyprinodontiformes |
குடும்பம்: | Poeciliidae |
பேரினம்: | Gambusia |
இனம்: | G. affinis |
இருசொற் பெயரீடு | |
Gambusia affinis (S. F. Baird & Girard, 1853) |
மேற்கத்திய கொசு மீன் (western mosquitofish, கம்பூசியா அஃபினிஸ்) என்பது ஒரு நன்னீர் மீன் இனமாகும். கொசுமீனில் கிழக்கத்திய கொசு மீன் என்ற இன்னொரு மீன் வகையும் உள்ளது.[2]
இந்தக் கொசுமீன்கள் பிற நன்னீர் மீன்களுடன் ஒப்பிடுகையில் சிறியவை ஆகும், பெண் மீன்கள் 7 cm (2.8 அங்) வரையும், ஆண் மீன்கள் 4 cm (1.6 அங்) வரையும் இருக்கும்.
இந்த மீன்களின் முதன்மை உணவு கொசுக்களின் குடம்பிகளாகும். இவை கொசுக்களின் குடம்பிகளைத் தின்றுவிடுவதால், கொசுக்கள் வளர்வதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும். இதனால் கொசுக்களை அழிக்க ஏதுவாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குளம், குட்டை, போன்று நீர்நிலைகளில் இந்த மீன்களை வளர்க்கின்றனர்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Whiteside, Bobby; Bonner, Timothy; Thomas, Chad; Whiteside, Carolyn. "Gambusia affinis western mosquitofish". Texas State University. http://www.bio.txstate.edu/~tbonner/txfishes/gambusia%20affinis.htm. பார்த்த நாள்: 25 October 2011.
- ↑ Wallus & Simon 1990, ப. 175
- ↑ கு. கணேசன் (18 அக்டோபர் 2017). "கொசுக்களுடன் ஒரு பனிப்போர்!". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/opinion/columns/article19880506.ece. பார்த்த நாள்: 20 அக்டோபர் 2017.