உள்ளடக்கத்துக்குச் செல்

கொங்கண சித்தர் குகை, சங்ககிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொங்கண சித்தர் குகை என்பது சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. சேலத்தில் இருந்து வடக்கே சங்ககிரியில் இருந்து இடைப்பாடி செல்லும் வழியில் நான்கு மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. அவற்றில் பெருமலை என்று அழைக்கப்படும் இந்த மலையில் உள்ள குகையே கொங்கண சித்தர் குகை என அழைக்கப்படுகிறது. மேலும் கொங்கண சித்தர் பல இடங்களில் மலைகளில் தங்கி தவம் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் ஊதியூர் மலை,வையப்பமலை,அளவாய் மலை ஆகியன குறிப்பிடத்தக்கதாகும். இந்த குகையில் மேற்கூரையில் 2500 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகளில் என்ற ஒரு எழுத்து மட்டும் தெளிவாக காணப்படுகிறது. இந்த கல்வெட்டுக்கு அருகில் யோக முத்திரையில் ஓவியம் ஒன்று காணப்படுகிறது. அதில், சித்தர் ஒருவர், பத்மாசனம் இட்டு அமர்ந்த நிலையில் இந்த ஓவியம் காணப்படுகிறது. இங்கு காணப்படும் யோக முத்திரையில் உள்ள உருவம் கொங்கண சித்தர் என நம்பப்படுகிறது. மேலும் இந்த குகையில் பல்லி ஓவியம், அறவாளி சக்கரங்கள் என்று அழைக்கப்படும் ஓவியங்களும் காணப்படுகின்றன.ராசிபுரம் அருகே உள்ள வையப்பமலையிலும் கொங்கண சித்தர் தவம் புரிந்த குகை ஒன்று மலையின் பின்புறம் அடிவாரத்தில் உள்ளது. சிறியதும் பெரியதுமான இரண்டு குகைகள் உள்ளன. பெரிய குகையில் கொங்கண சித்தர் தவமிருந்ததாக கர்ண பரம்பரை செய்திகள் மற்றும் அலைவாய்மலை தலவரலாறு கூறுகின்றன..இதுவும் கொங்கண சித்தர் குகை என்றே அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]