உள்ளடக்கத்துக்குச் செல்

கையற்ற திருக்கை வகையி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்கிரோப்செட்டைடீ (Achiropsettidae) (அ) தெற்கு ஃப்ளவண்டர் (Souther Flounder) என அறியப்படும் மீன் குடும்பம் பிளிரோநெக்டிபார்மசு என்னும் தட்டைமீன்களை உள்ளடக்கிய வரிசைகளுக்குள் அடங்கும். இதில் சிறிய மற்றும் மிதமான அளவுகளைக் கொண்ட கடலடி மீன்கள் இடம்பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் அண்டார்டிகா மற்றும் துணை அண்டார்டிகா நீர்ப்பகுதிகளில் காணப்படுகின்றன.

உடல் சுருங்கியும் சற்று இழுத்தது போலவும் காணப்படும். இதன் இருக் கண்களும் இடப்புறத்தில் அமையப் பெற்றிருக்கும். இது கடல் நீரில் மட்டுமே வாழக்கூடிய மீன்களாகும். இக்குடும்பத்தில் 4 பேரினங்களும் 6 சிற்றினங்களும் இடம்பெற்றுள்ளன.

அக்கிரோப்செட்டைடீக் குடும்பம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கையற்ற_திருக்கை_வகையி&oldid=3696888" இலிருந்து மீள்விக்கப்பட்டது