கைஜியாவின் கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A snake twined around a chalice
கைஜீயாவின் கிண்ணத்தின் தோற்றம்

கைஜியாவின் கிண்ணம் (Bowl of Hygieia) என்பது மருந்தியல் துறையில் பயன்படுத்தப்படும் சின்னங்களில் ஒன்றாகும். அசுலெபியசின் தடியுடன், மேற்கத்திய நாடுகளில் மருத்துவம் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் மிகப் பழமையான மற்றும் முக்கியமான சின்னங்களில் ஒன்றாகும். சுகாதாரம், துப்புரவு, தூய்மை ஆகியவற்றின் கிரேக்கத் தெய்வமாகவும், அசுலெபியசின் மகளாகவும் கைஜியா இருந்தார். இவர் பெரும்பாலும் பிரார்த்தனைகள் மற்றும் பாடல்களில் நெருக்கமாகத் தொடர்புடையவர். அசுலெபியசின் சின்னம் இவரது தடியாகும். இதைச் சுற்றி பாம்பு ஒன்று பின்னப்பட்டிருக்கும். கைஜியாவின் சின்னம் ஒரு கிண்ணம் அல்லது கலசம் ஆகும். இதன் தண்டைச் சுற்றிப் பின்னப்பட்ட பாம்பு ஒன்று காணப்படும். இப்போகிரட்டீசு உறுதிமொழியின் போது கைஜியாவின் தந்தை அசுலெபியசு மற்றும் பனேசியாவுடன் கைஜியா நினைவுகூரப்படுகிறது.

மருந்து சங்கங்களால் சின்னத்தின் பயன்பாடு[தொகு]

கைஜியாவின் கிண்ணம் குறைந்தபட்சம் 1796ஆம் ஆண்டுவரை மருந்தியல் தொழிலின் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது. இது பாரிசியன் மருந்தியல் சமூகத்திற்காக அச்சிடப்பட்ட நாணயத்தில் பயன்படுத்தப்பட்டது.[1] அமெரிக்க மருந்தியல் சமூகம், கனடா மருந்தியல் சங்கம், ஆத்திரேலியா மருந்தியல் சங்கம், மற்றும் மருத்துவ மருந்தியல் சங்கம், பிரான்சில் உள்ள மருந்தாளுநர்களின் ஆணையர் குழுவின் போன்ற உலகெங்கிலும் உள்ள பல மருந்தியல் தொடர்பான சங்கங்களால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.[2][3][4][5][6][7]

ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள மருந்தகங்களின் அடையாளங்களில் கைஜியாவின் கிண்ணம் ஒரு பொதுவான சின்னமாகும். சிறு உரலும் உலக்கையும் அமெரிக்காவில் மிகவும் பொதுவான சின்னமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "History of the Bowl of Hygeia award | Drug Topics". Drugtopics.modernmedicine.com. 2002-10-07. பார்க்கப்பட்ட நாள் 2013-04-26.
  2. "Bowl of Hygeia Wyeth.com". 2009-04-16. Archived from the original on April 16, 2009. பார்க்கப்பட்ட நாள் 2013-04-26.
  3. "Home - CPhA". Pharmacists.ca. பார்க்கப்பட்ட நாள் 2013-04-26.
  4. "Pharmaceutical Society of Australia".
  5. "Doctor of Pharmacy Association -". Archived from the original on 2012-12-26. பார்க்கப்பட்ட நாள் 2013-08-03.
  6. "La protection de la croix verte et du caducée - Nos missions - Ordre National des Pharmaciens" (in பிரெஞ்சு). Ordre.pharmacien.fr. 2012-06-14. பார்க்கப்பட்ட நாள் 2013-04-26.
  7. "Code de la santé publique - Article R4235-53" (in பிரெஞ்சு). Legifrance. 2004-07-29. பார்க்கப்பட்ட நாள் 2013-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைஜியாவின்_கிண்ணம்&oldid=3918626" இலிருந்து மீள்விக்கப்பட்டது