கே. பி. பத்மநாப மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. பி. பத்மநாப மேனன் (K. P. Padhmanabha Menon) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வரலாற்றாசிரியர் ஆவார். ஒரு வழக்கறிஞராகவும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னையின் அரசு தலைமை வழக்கறிஞராகவும் இவர் பணிபுரிந்துள்ளார். 1857 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எடப்பள்ளிக்கு அருகில் உள்ள எலமக்ராவில் "திருவிதாங்கூர் வரலாறு" என்னும் நூலின் ஆசிரியரும் மீனவ அமைச்சருமாக இருந்த பி.சங்குனிமேனனுக்கு மகனாகப் பிறந்தார்.[1] இலண்டன் நகரத்தில் அமைந்துள்ள அரச ஆசிய சமூகத்தின் உறுப்பினராக இருந்தார். 1910 ஆம் ஆண்டு கேரள வரலாறு என்ற 2500 பக்க நூலை எழுதி முடித்தார். கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி நகரில் அமைந்துள்ள ஆலுவா அரண்மனையை நூல் எழுதுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டார். பத்மநாப மேனன் 1919 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார். 1924 ஆம் ஆண்டு பத்மநாப மேனன் மறைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நூல் பதிப்பிக்கப்பட்டு வெளியானது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._பத்மநாப_மேனன்&oldid=3495469" இலிருந்து மீள்விக்கப்பட்டது