கே. சி. தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ண சந்திர தே
பிறப்பு(1893-08-24)24 ஆகத்து 1893
இறப்பு28 நவம்பர் 1962(1962-11-28) (அகவை 69)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
பணிஇசை இயக்குனர், இசைக்கலைஞர், நடிகர், பாடகர் மற்றும் இசை ஆசிரியர்.

கிருஷ்ண சந்திர தே (Krishna Chandra Dey) (பிறப்பு: 1839 ஆகத்து 24 - இறப்பு 1962 நவம்பர் 28), கே. சி. தே என்றப் பெயரில் சிறப்பாக அறியப்படும், இவர் ஓர் இந்திய இசையமைப்பாளரும், இசைக்கலைஞரும், எழுத்தாளரும், பாடகரும், நடிகரும், மற்றும் இசை ஆசிரியரும் ஆவார். இவர் கொல்கத்தாவில் பிறந்தார். இவர் எஸ். டி. பர்மனின் முதல் இசை ஆசிரியராகவும் மற்றும் வழிகாட்டியாகவும் இருந்தார். இவரது தந்தையின் பெயர் ஷிப்சந்திர தே என்பதாகும். 1906 ஆம் ஆண்டில், தனது பதினான்கு வயதில், கண்பார்வை இழந்து முற்றிலும் பார்வையற்றவராக ஆனார். [1]

தொழில்[தொகு]

பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றிய இவர், இறுதியாக 1940 வரை கொல்கத்தாவில் உள்ள நியூ தியேட்டர்களில் பணிபுரிந்தார். இவரது கீர்த்தனை பாடல்களுக்காக இவர் சிறப்பாக நினைவுகூரப்படுகிறார். அந்த காலங்களில் கொல்கத்தாவின் பல உயரடுக்கு குடும்பங்களால் இவர் ஆதரிக்கப்பட்டார். இவர் அடிக்கடி சோவபஜாரின் ராஜ்பரி, பீடன் தெருவின் மித்ரா மாளிகை மற்றும் பலரது வீடுகளில் பாடினார். கே.சி தே சுமார் 600 பாடல்களைப் பதிவு செய்துள்ளார். பெரும்பாலும் பெங்காலி, இந்தி, உருது, குஜுராத்தி மற்றும் 8 முஸ்லீம் மதப் பாடல்கள் ஆகியவையாக இருந்தன.

திரை வாழ்க்கை[தொகு]

1932 முதல் 1946 வரை திரைப்படங்களுக்கு தே பாடி இசையமைத்தார். அதே காலகட்டத்தில் திரைப்படங்களிலும் நடித்தார். திரைப்படங்களில் பங்கேற்க கொல்கத்தாவிலிருந்து மும்பை வரை பயணம் செய்தார். 1942 இல் இவர் மும்பைக்குக் குடிபெயர்ந்தார். இவரது இசை மற்றும் பாடல் இரண்டின் தரம் குறையத் தொடங்கிய பின்னர் தே 1946 இல் திரைப்படங்களை விட்டு வெளியேறினார். இவர் கொல்கத்தாவில் 1962 நவம்பர் 28 அன்று இறந்தார். [2] பின்னணி பாடகர் மன்னா தே இவரது மருமகன் ஆவார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2 July 2017. பார்க்கப்பட்ட நாள் 29 July 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. Land and people of Indian states and union territories, p. 517, கூகுள் புத்தகங்களில்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._தே&oldid=3241473" இலிருந்து மீள்விக்கப்பட்டது