கே. சின்னம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. சின்னம்மா
K. Chinnamma
பிறப்பு1883 (1883)
திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு1930 (அகவை 46–47)
திருவிதாங்கூர்
பணிசமூக சேவையாளர், பெண்ணிய செயற்பாட்டாளர்

கே. சின்னம்மா (K. Chinnamma) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணியவாதியாவார். சமூக சேவகர் மற்றும் பெண் ஆர்வலர் என நன்கு அறியப்படுகிறார். 1918 ஆம் ஆண்டில் ராசா சிறீமூலம் திருநாள் சசுட்யப்த பூர்த்தி இசுமாரக இந்து மகிளா மந்திரம் என்ற ஆதரவற்ற பெண்களுக்க்கான இல்லத்தை தொடங்கினார். இது கேரள மாநிலத்தின் ஆதரவற்ற பெண்களுக்கான முதல் இல்லமாகும். மதம் அல்லது சாதியைப் பொருட்படுத்தாமல், குறைந்த வருவாய் பின்னணியைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கல்வி, அதிகாரம் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்துடன் இந்த நிறுவனத்தை நிறுவினார். [1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கே. சின்னம்மா 1883 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் அட்டிங்கலில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அட்டிங்கல் எடவமடம் வீட்டில் கல்யாணி அம்மாவுக்கும் வேலாயுதன் பிள்ளைக்கும் மகளாகப் பிறந்தார். [2] வறுமையும், ஒடுக்குமுறையும் சின்னம்மாவை சிறுவயதிலிருந்தே பீடித்துள்ளன. தாய்வழி அத்தையால் ஊக்கப்படுத்தப்பட்ட இவர், போர்டு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அங்குள்ள முதல் பெண் மாணவர்களில் ஒருவராகவும் இருந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள சேனானா மிசன் பெண்கள் பள்ளியில் தனது அடிப்படைக் கல்வியை முடித்த பிறகு, திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் நுண் கலைகள் பட்டம் பெற்றார். [2] கல்விக்குப் பிறகு பொதுக்கல்வித் துறையில் உதவி ஆய்வாளராகச் சேர்ந்தார். அப்போதைய பள்ளி ஆய்வாளரான கரபிட்டிடம் உதவியாளராக நியமிக்கப்பட்ட சின்னம்மா பதினொரு தாலுகாக்களுக்குப் பொறுப்பாளராக இருந்தார். [2]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு[தொகு]

சி.வி.ராமன் பிள்ளையின் சகோதரர் தாசில்தார் நாராயண பிள்ளையின் மகன் குமார பிள்ளையை சின்னம்மா திருமணம் செய்து கொண்டார். [2] தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கோட்டயத்தில் வசித்து வந்தார். அவர் 1930 ஆம் ஆண்டில் இறந்தார். .

சமூக சேவை மற்றும் செயல்பாடு[தொகு]

பெண்களை இனப்பெருக்க இயந்திரங்கள் என்று எம்.சி.சங்கரப்பிள்ளை ஒரு பதிப்பகத்தில் எழுதியபோது, சின்னம்மாவும் அவரது வகுப்புத் தோழி கல்யாணி அம்மாவும் அதைக் கடுமையாக விமர்சித்தார்கள். [3] 1911 ஆம் ஆண்டு , பெண்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியபோது, தீர்த்தபாத பரமகம்சரைச் சந்தித்தார். அவருடைய ஆலோசனையின் பேரில் சமூகப் பணிகளில் கவனம் செலுத்தினார். [3]

திருமணமான அதிகாரிகளின் உரிமைகளுக்கு ஆதரவாக வாதிட்ட சின்னம்மா, பல பெண்கள் சங்கங்களை நிறுவியுள்ளார். 1908 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கோட்டயம் பிரிவில் பள்ளி ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். பணியின் ஒரு பகுதியாக, கிறித்துவ கன்னிகையர்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்குச் சென்றார். கிறித்துவ குழந்தைகளுக்கான பள்ளிகளுடன் இணைந்த அனாதை இல்லங்களைப் பார்த்தார். இந்து சமூகத்தில் உள்ள அனாதைகள் மற்றும் விதவைகளுக்கு ஒரு காப்பகம் தொடங்கினால் எப்படி இருக்கும் என்று யோசித்தார். [4] 1916-ஆம் ஆண்டில் அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் சிறீமூலம் திருநாளின் 60-ஆவது பிறந்தநாளில் பெண்கள் மாநாட்டில் சின்னம்மா தனது கருத்தைப் பேசினார். ஆனால் இவரது யோசனையை யாரும் ஆதரிக்கவில்லை. [4]

மகளிர் சங்கத் தலைவராக இருந்த பி.ராமன் தம்பி, 'சசுடிபூர்த்தி மகோற்சவம்' (60வது பிறந்தநாள் விழா) ஏற்பாடு செய்து, சின்னம்மாவிடம் பணியை ஒப்படைத்தார். விழாவின் முடிவில் உபரியாக 200 ரூபாய் சின்னம்மாவிடம் நின்றது. மீதிப் பணத்தை என்ன செய்வது என்ற விவாதத்தில், சின்னம்மா மீண்டும் ஒருமுறை ஆதரவற்ற பெண்களுக்கு வீடு தேவை என்ற கோரிக்கையை எழுப்பினார். பலத்த எதிர்ப்பு இருந்தது ஆனால் பின்னர் ராமன் தம்பியின் மனைவி இந்த யோசனையை ஆதரித்தார். [4] சின்னம்மா ஒரு சக்திவாய்ந்த உரையை ஆற்றினார். இங்கிருக்கும் நம்மில் பலருக்கு தேவயான உணவும் உடைகளும் கிடைத்து விடுகின்றன. ஆனால் இவை எதுவுமே இல்லாத பல பெண்கள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். உங்களில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், நமக்கு இதயம் இருந்தால், பெண் கல்விக்காக இவ்வளவு செய்த மன்னரைப் போற்றும் வகையில், இந்த ஆதரவற்ற பெண்களுக்கு நாம் நிச்சயமாக உதவ வேண்டும். [4] என்பதாக அப்பேச்சு அமைந்தது.

பேச்சு வேலை செய்தது மற்றும் 1918 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் ராசா சிறீமூலம் திருநாள் சசுட்டியப்த போற்றி இசுமாரக இந்து மகிளா மந்திரம் நிறுவப்பட்டது. ஏழைப் பெண்களுக்கு கல்வி மற்றும் தொழில் பயிற்சி அளிக்கும் நிறுவனமாக இதை உருவாக்கினார். [2] மகிளா மந்திர் என்ற பெண்கள் பதிப்பகத்தையும் நடத்தி வந்தார். [2] சின்னம்மா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மகிளா மந்திருக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்தியதாகப் பேசப்பட்டதால், பள்ளி ஆய்வாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். [4] பின்னர் பெட்டா மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியையானார். [4] சின்னம்மா அப்போது கேரளாவில் இருந்த தீண்டாமையை புறக்கணித்து, தாழ்த்தப்பட்ட பெண்களை பள்ளியில் சேர்த்துக் கொண்டார். [4]

பின்னர் சின்னம்மா தனது வேலையை விட்டுவிட்டு மகிளா மந்திரில் முழுநேரமாக பணியாற்றினார். இந்த நிறுவனத்திற்கு பணம் திரட்ட நிறைய பயணம் செய்தார்.[5]

கௌரவங்கள்[தொகு]

மகிளா மந்திர் மற்றும் அதற்கு தலைமை தாங்கிய சின்னம்மாவை ஜவகர்லால் நேரு, அன்னி பெசன்ட் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பாராட்டியுள்ளனர் . [6] திருவனந்தபுரத்தில் உள்ள சின்னம்மா நினைவு பெண்கள் மேல்நிலைப் பள்ளி [7] இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. சின்னம்மாவின் சிறந்த பங்களிப்புகள் மற்றும் தன்னலமற்ற சேவைகளை நினைவுகூரும் வகையில், மகிளா மந்திரம் தனது நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக 100 சிறுமிகளுக்கு கல்வி உதவி வழங்கியது. [8]

2019 நவம்பரில், சின்னம்மாவால் தொடங்கப்பட்ட இந்து மகிளா மந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு அட்டையை வெளியிட்டது. அட்டையில் கே.சின்னம்மாவின் படத்துடன் கூடிய சிறப்பு முத்திரை உள்ளது. [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "THE WEEK" (in en). The Week. https://www.theweek.in/wire-updates/national/2019/10/23/srg2-kl-mahila%20mandiram.html. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "കെ ചിന്നമ്മ". Kerala Women (in மலையாளம்). Department of Women and Child Development, Kerala state. 27 March 2021."കെ ചിന്നമ്മ". Kerala Women (in Malayalam). Department of Women and Child Development, Kerala state. 27 March 2021.
  3. 3.0 3.1 "ദിഗംബര സ്മരണകൾ 208;"രണ്ട് കൂട്ടുകാരികൾ, കെ. ചിന്നമ്മയും ബി.കല്യാണി അമ്മയും";എം.രാജീവ് കുമാർ". anweshanam.com (in மலையாளம்). 8 October 2021.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "Remembering Kerala's Chinnamma, who opened state's first home for destitute women" (in en). The News Minute. https://www.thenewsminute.com/article/remembering-keralas-chinnamma-who-opened-states-first-home-destitute-women-115640. 
  5. "ഇത് ചിന്നമ്മയുടെ കഥ, പൂജപ്പുര മഹിളാ മന്ദിരത്തിന്റേയും" (in en). Mathrubhumi. https://archives.mathrubhumi.com/thiruvananthapuram/news/22nov2021-1.6200185. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. Malayalam, Media (22 November 2021). "ഇത് ചിന്നമ്മയുടെ കഥ, പൂജപ്പുര മഹിളാ മന്ദിരത്തിന്റേയും - Media Malayalam (മീഡിയ മലയാളം)" இம் மூலத்தில் இருந்து 22 நவம்பர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211122061118/https://mediamalayalam.com/this-is-the-story-of-chinnamma-and-the-poojappura-mahila-mandir/. 
  7. Sathyendran, Nita (19 March 2015). "For women, by women". https://www.thehindu.com/features/metroplus/for-women-by-women/article7011444.ece. Sathyendran, Nita (19 March 2015). "For women, by women". The Hindu.
  8. "‘Children’ of Mahila Mandiram Come Home to Thank ‘Mothers’". 12 November 2019. https://www.newsexperts.in/children-mahila-mandiram-come-home-thank-mothers/. 
  9. "India Post Issues Special Cover To Mark Centenary Of Mahila Mandiram - Kerala9.com". 28 November 2019. https://www.kerala9.com/latest-news/india-post-issues-special-cover-to-mark-centenary-of-mahila-mandiram/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சின்னம்மா&oldid=3582694" இலிருந்து மீள்விக்கப்பட்டது