கே. சந்திரசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. சந்திரசேகரன் (K. Chandrasekaran) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் மற்றும் தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 1989ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் அமைச்சராவதற்கு முன்பு கால்நடை மருத்துவராக இருந்தார். பின்னர் இவர் வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினை தொடங்கிய பின் மதிமுகவில் இணைந்து பணியாற்றிவருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சந்திரசேகரன்&oldid=3168180" இலிருந்து மீள்விக்கப்பட்டது