கே. சக்ரவர்த்தி
கே. சக்ரவர்த்தி | |
---|---|
பிறப்பு | பொன்னேகல்லு, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் | 8 செப்டம்பர் 1936
இறப்பு | 2 பெப்ரவரி 2002 சென்னை, தமிழ்நாடு | (அகவை 65)
இசைத்துறையில் | 1971-1999 |
அப்பாராவ் கொம்மினேனியாக பிறந்த கே சக்ரவர்த்தி (K. Chakravarthy) தென்னிந்திய திரையுலகில் இந்திய இசை இயக்குநராக இருந்தார். [1] [2] [3]
சொந்த வாழ்க்கை[தொகு]
இவர், ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பொன்னேகல்லு என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது மகன் சிறீ கொம்மினேனி என்பவரும் ஒரு இசை இயக்குனராகவும் பின்னணி பாடகராகவும் இருந்தார்.
தொழில்[தொகு]
சக்ரவர்த்தி மகாவாடி வெங்கடப்பையாவிடம் இந்திய பாரம்பரிய இசையைக் கற்றுக்கொண்டார். குண்டூரில் "வினோத் ஆர்கெஸ்ட்ரா" என்ற இசைக் குழுவை உருவாக்கி, மெல்லிசை நிகழ்ச்சிகளை வழங்கி வந்தார். அந்த நாட்களில், எச்.எம்.வி. என்ற இசை நிறுவனத்தின் மங்காபதி என்பவர் இவரது திறமையை அடையாளம் கண்டு சென்னைக்கு அழைத்தார். எச்.எம்.வி நிறுவனம் இவரது இரண்டு தனிப் பதிவுகளை வெளியிட்டது. அதில் "கண்ணா நேனொக்க கலா" என்பதும் அடங்கும்.
திரைப்பட வாழ்க்கை[தொகு]
தெலுங்கில் இவரது முதல் படம், மூக பிரேமா 1971இல் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு முன்பு இவர் ஒரு இந்தித் திரைப்படத்திற்கு பின்னணி இசையமைதிருந்தார். அந்த திரைப்பட தலைப்புகளில் அப்பராவ் என்ற இவரது பெயர் சக்ரவர்த்தி என்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் இவர் சக்ரவர்த்தி என்ற பெயரைத் தொடர்ந்தார். மூக பிரேமா படம் திரையரங்க வசூலில் ஒரு நல்ல வெற்றியைப் பெறவில்லை. அதையடுத்து வந்த சாரதா (1973) இவருக்கு நல்ல வெற்றியைக் கொடுத்தது. ஆனால் இந்த படத்திற்குப் பிறகு இவர் நன்கு அங்கீகரிக்கப்படவில்லை.
1977ஆம் ஆண்டில், யமகோலா என்ற படம் வெளிவந்தது. இது இவரது தொழில் வாழ்க்கையின் சிறந்த திருப்புமுனையாகும்.
பின்னனி குரல் கலைஞராக இருந்த இவர் 600 திரைப்படங்களில் நடிகர்களுக்கு குரல் கொடுத்தார். ஒரு சில பாடல்களுக்கான பாடல்களையும் எழுதினார். பாடகராகவும் இருந்த இவர் ஒரு சில படங்களில் நடித்தும் இருந்தார்.
விருதுகள்[தொகு]
- 1983 ஆம் ஆண்டில் நேட்டி பாரதம் படத்திற்கான சிறந்த இசை இயக்குநருக்கான நந்தி விருது பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Sudhish Kamath (20 August 2010). "Arts / Music : Baton and beat". http://www.thehindu.com/arts/music/article583910.ece.
- ↑ "Music Director Chakravarthy profile & biography -". 26 November 2010 இம் மூலத்தில் இருந்து 26 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101126141430/http://www.newsofap.com/art-386-music-director-chakravarthy-profile-biography.html.
- ↑ "Chakravarthy - King of Melody". http://www.idlebrain.com/research/anal/anal-chakravarthy.html.