உள்ளடக்கத்துக்குச் செல்

கே. ஆர். மீரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. ஆர். மீரா
கே.ஆர். மீரா
பிறப்பு19, பிப்ரவரி, 1970
சாஸ்தாம்கோட்டை, கொல்லம்
புனைபெயர்மீரா
தொழில்புதினம், சிறுகதை மற்றும் திரைக்கதை ஆசிரியர், இதழாளர்
தேசியம்இந்தியா
வகைபுதினம், சிறுகதை
குறிப்பிடத்தக்க விருதுகள்கேரள சாகித்திய அகாதமி விருது
துணைவர்திலீப்
பிள்ளைகள்சுருதி திலீப்

கே. ஆர். மீரா (பிறப்பு 19 பிப்ரவரி 1970) என்பவர் புகழ் பெற்ற மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய ’ஆவே மரிய’ என்ற மலையாளச் சிறுகதை 2009-ஆம் ஆண்டு ’கேரள சாகித்ய அகாதமி விருது’ பெற்றது.[1]. நான்கு சின்னத்திரை தொடர்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ள கே. ஆர். மீரா தேசிய விருது பெற்ற ’ஒரே கடல்’ என்ற திரைப்படத்திற்கும் திரைக்கதை எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

கே. ஆர். மீரா 1970-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள சாஸ்தாம்கோட்டை என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய பெற்றோா் இராமச்சந்திரன் பிள்ளை மற்றும் அம்ரிதா குமாரி ஆவர். தமிழ்நாட்டில் திண்டுக்கல், காந்தி கிராமக் கல்லூரியில் தகவல்தெடா்பு ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றார். மலையாள மனோரமாவில் ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்த கே.ஆர். மீரா, பிறகு எழுத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக அந்த பதவியைப் பணித்துறப்பு செய்தார்.

இவர் 2001 ஆம் ஆண்டில் புனைகதை எழுதுவதத் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டில் வெளியான இவரது சிறுகதைகள் சிறுகதை தொகுப்பாக "ஆர்மாயு நாரராம்பு" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அப்போதிலிருந்து இவர் சிறுகதைகள், ஐந்து புதினங்கள் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவருடைய ஆரம்ப கால புதினங்களில் மராட்டியம் மருண் மருண் நன், மீரா சாதுவு, நெத்ரோன்மலன், யாதசீனி சுவிஷேஷம் ஆகியவை அடங்கும். இவரது புதினமான "ஆரச்சார்" (2012) மலையாள மொழியில் மொழிபெயர்க்கபட்ட சிறந்த இலக்கிய படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜே. தேவிகா என்பவர் அதை "தி ஹாங் வோமன்" என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தாா். இப்புதினமானது 38000 பிரதிகளை (ஜனவரி 2015 வரை) விற்றுள்ளது. முதன்முதலாக "மாத்யம் வீக்லி" பத்திரிகையில் தொடராக வெளியிடப்பட்டது, 2012 இல் டி.சி. புக்ஸ் அதை புத்தகமாக வெளியிட்டது. நான்கு தொலைக்காட்சித் தொடா்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். "ஓரே கடல்"என்ற படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இதற்கு தேசிய திரைப்பட விருதை பெற்றாா். மீரா தனது கணவர் எம்.எஸ்.எஸ் உடன் கோட்டையத்தில் வசிக்கின்றாா். இவரது கணவா் மலையாள மனோரமாவில் பத்திரிகையாளராக பணிபுரிகிறார். அவர்களது ஒரே மகள் ஸ்ருதி ஆவாா்.

இவரது சிறுகதைகளுள் பல தமிழில் கே. வி. ஷைலஜா என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வம்சி புக்ஸ் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.[2].

தென்னிந்திய மொழிகளில் சமகால எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்ற தொகுப்பில் இவர் எழுதிய [3] சிறுகதை இடம்பெற்றுள்ளது.

விருதுகள்

[தொகு]
 • கேரள சாகித்ய அகாதமி விருது (2013)
 • அங்கணம் விருது
 • லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது
 • பி.யூ.சி.எல். விருது
 • சொவ்வர பரமேசுவரன் விருது
 • ஒட்டக்குழல் விருது (2013)
 • வயலார் விருது (2014)
 • கேந்திர சாஹிதி அகாடமி விருது (2015)

மேற்கோள்கள்

[தொகு]
 1. "சாகித்திய அகாதமி விருதுகள் அறிவிப்பு". Archived from the original on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2012-11-19.
 2. கெ.ஆர். மீராவின் சிறுதகைதள் தமிழில்
 3. செய்திகளின் நாற்றம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._மீரா&oldid=3935060" இலிருந்து மீள்விக்கப்பட்டது