கேரள மாநில பல்லுயிர் வாரியம்
கேரளா மாநில பல்லுயிர் வாரியம் (The Kerala State Biodiversity Board) என்பது இந்தியாவில் தேசிய பல்லுயிர் ஆணையத்தால் அமைக்கப்பட்ட 28 மாநில பல்லுயிர் வாரியங்களில் ஒன்றாகும். இது கேரள அரசின் தன்னாட்சி அமைப்பாகும்.
கேரளா மாநில பல்லுயிர் வாரியத்தின் தலைமையகம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இந்த வாரியமானது 2008-ல் அமைக்கப்பட்ட மாநில பல்லுயிர் சட்டம் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2002 ஆகியவற்றின் கீழ் செயல்படுகிறது. கேரளா மாநில பல்லுயிர் வாரியம், தலைவர் மற்றும் உறுப்பினர் செயலாளரால் வழிநடத்தப்படுகிறது. இதில் நிபுணத்துவ அரசு அதிகாரிகள் குழு ஒன்றும் உள்ளது. இந்த குழு செயல்பாடுகளில் வழிநடத்துகிறது. கேரளா மாநில பல்லுயிர் வாரிய தலைவராக முனைவர் சி ஜார்ஜ் தாமசும், உறுப்பினர் செயலாளராக முனைவர் ஏ. வி. சந்தோஷ்குமாரும் உள்ளனர்.
21 மே 2014 அன்று, உயிரியல் பன்முகத்தன்மைக்கான பன்னாட்டு நாளினை முன்னிட்டு, கேரளா மாநில பல்லுயிர் வாரியம் கேரளா மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் மாநிலத்தின் வளமான பல்லுயிர் பெருக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் 'சாந்திஸ்டல்கள்' (பல்லுயிர் மையங்கள்) நிறுவும் திட்டத்தைச் செயல்படுத்தியது.[1]
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம் [1]