கேரள மாநில நுகர்பொருள் வினியோகக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரையறுக்கப்பட்ட கேரள மாநில நுகர்பொருள் வினியோகக் கழகம்
சுருக்கம்சப்ளெக்கோ
உருவாக்கம்1974
வகைஅரசுடைமை அமைப்பு
தலைமையகம்கொச்சி, கேரளம், இந்தியா
தலைவர்
சி. கமலா வருதன இராவு
மேலாண்மை இயக்குநர்
ஏ. தி. சேமிசு
தாய் அமைப்பு
கேரள அரசு உணவுப்பொருள் மற்றும் நுகர்பொருள் வினியோகத் துறை
பணிக்குழாம்
4500இற்கும் மேலானவர்கள்
வலைத்தளம்supplycokerala.com

வரையறுக்கப்பட்ட கேரள மாநில நுகர்பொருள் வினியோகக் கழகம் (Kerala State Civil Supplies Corporation Ltd.) கேரள மாநிலத்தில் பொது வினியோகத்திற்கு அரசுடமையில் உள்ள ஒரு தொழில் நிறுவனமாகும். இது பொதுவாக சப்ளெக்கோ என அறியப்படுகிறது. இது மாநிலம் முழுமைக்கும் உள்ள விற்பனை நிலையங்கள் வழியாக குறைந்த விலைக்கு நுகர்பொருட்களை வினியோகம் செய்கிறது. 1974-ல் உறுவாக்கப்பட்ட இந்நிறுவனம், கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

திறந்த சந்தையில் முதன்மை தேவைப்பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்துதல் என்பதனை முக்கிய நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், அரசு திட்டத்தின் கீழ் இடைநிலை சந்தைகளின் வாயிலாக அரசு நிர்ணய மானிய விலையில் பொருட்களை வாங்கி நுகர்வோருக்கு விற்கிறது.

வெளியிணைப்புகள்[தொகு]