உள்ளடக்கத்துக்குச் செல்

கேத்வாலதெரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேத்வாலதெரைட்டு
Cadwaladerite
பொதுவானாவை
வகைஆலைடு கனிமம்
வேதி வாய்பாடுAlCl(OH)2•4(H2O)
இனங்காணல்
மோலார் நிறை168.51 கி/மோல்
நிறம்எலுமிச்சை மஞ்சள்
படிக அமைப்புamorphous
முறிவுசங்குருவம்
மிளிர்வுபளபளப்பானது
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி1.66
ஒளியியல் பண்புகள்சமதிருப்பம்
ஒளிவிலகல் எண்n = 1.513, மாறுபடும்
பிற சிறப்பியல்புகள்ஈரமுறிஞ்சும்
மேற்கோள்கள்[1][2][3][4]

கேத்வாலதெரைட்டு (Cadwaladerite) என்பது AlCl(OH)2•4(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஓர் அரிய அலுமினியம் ஆலைடு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. சல்பேட்டு தாதுக்களுடன் தொடர்புடைய ஒரு படிக உருவமற்ற பொருள் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஓர் ஆலைடு படிகத் தொகுதியுடன் பதிக்கப்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு தரவுகள் இல்லாததால் கேத்வாலதெரைட்டு கனிமத்தின் நிலை நிச்சயமற்றதாகும். [2][3][4] 1941 ஆம் ஆண்டு சிலி நாட்டிலுள்ள தாராபக்கா மண்டலத்தின் இக்விக் மாகாணத்திலுள்ள விக்டோரியா செகுண்டா சுரங்கத்தில் கேத்வாலதெரைட்டு முதன் முதலாக கண்டறியப்பட்டது. [3] இயற்கை அறிவியல் கல்விக்கழகத்தின் தலைவரான சார்லசு மீக்சு பிதில் கேத்வாலதெர் நினைவாக கனிமத்திற்கு கேத்வாலதெரைட்டு எனப் பெயரிடப்பட்டது. [4]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேத்வாலதெரைட்டு&oldid=2970276" இலிருந்து மீள்விக்கப்பட்டது