கேசப் சக்ரவர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேசப் சக்ரவர்த்தி (Keshab Chakravarthy) ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவார்.[1] இந்திய விடுதலைப்போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆங்கில அரசுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவமான கக்கோரி இரயில் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கேசப் சக்ரவர்த்தி கல்கத்தா மருத்துவக் கல்லூரியின் மாணவராக இருந்தார். இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் வங்காளத்தில் செயல்பட்ட புரட்சி இயக்கமான அனுசீலன் சமித்தி அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்த சாம் சுந்தர் இவருடைய நெருங்கிய கூட்டாளி ஆவார்.

சுதந்திரப் போராட்டம் மற்றும் ககோரி ரயில் கொள்ளை[தொகு]

இந்தியாவில் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இந்துசுத்தான் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய இந்தியப் புரட்சியாளராக கேசப் சக்ரவர்த்தி அறியப்படுகிறார்.[2] இந்துசுத்தான் குடியரசுக் கழகமாக செயல்பட்டுவந்த அமைப்புதான் 1928 ஆம் ஆண்டில் இந்துசுத்தான் சோசலிச குடியரசுக் கழகம் ஆனது.

சந்திரசேகர் ஆசாத்து, அசுபகுல்லா கான் மற்றும் ராம் பிரசாத் பிசுமில் ஆகியோருடன் இளம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒரு பகுதியாக கேசப் சக்ரவர்த்தி இருந்தார். புரட்சிக்கான துப்பாக்கிகளை வாங்குவதற்கான அவர்களின் தேவைக்கு நிதியளிக்க இவர்கள் பழைய பிரித்தானிய இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தனர். இரயில்களில் காவலர் பெட்டி மூலம் கொண்டு செல்லவும் திட்டமிட்டனர்.[3]

1925 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 8 ஆம் தேதி, கேசாப் உட்பட 10 பேர் கொண்ட குழு உத்தரபிரதேசத்தின் கக்கோரி இரயில் நிலையத்தில் இரயிலில் கொள்ளையடித்தது.[4] இவர்கள் தப்பிச் சென்றாலும் பின்னர் ஒரு மாதத்தில் கைது செய்யப்பட்டனர். கேசப் இக்கைதில் சிக்காமல் எளிதாக தப்பினார்.[5]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Azad (Tewari), Chandrashekhar (1925). Kakori ke veeron se parichay. Banaras. 
  2. Shrikrishan Saral (1999). Indian revolutionaries: a comprehensive study, 1757-1961. Ocean Books. பக். 103–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87100-19-5. 
  3. Vijay Kumar (Ram Prasad Bismil) (1925). The Revolutionary. UP, India. http://www.campusghanta.com/dimag-ki-dahi/kakori-ke-veeron-se-parichay. பார்த்த நாள்: 7 January 2015. 
  4. "Kakori Train Robbery December 19, 1927 : the Story of Real Freedom Fighters". www.ibtl.in. IBTL. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.
  5. Rana, Bhawan Singh (2004). Chandra Shekhar Azad (An Immortal Revolutionary of India) (1st ). New Delhi, India: Diamond Pocket Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788128808166. https://books.google.com/books?id=sudu7qABntcC&dq=what+happened+to+keshab+chakravarty+kakori&pg=PA3. பார்த்த நாள்: 7 January 2015. 

புற இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசப்_சக்ரவர்த்தி&oldid=3754395" இலிருந்து மீள்விக்கப்பட்டது