கெப்பால் ஏரி

ஆள்கூறுகள்: 12°21′30.2″N 76°36′37.7″E / 12.358389°N 76.610472°E / 12.358389; 76.610472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெப்பால் ஏரி
கெப்பால் ஏரி is located in கருநாடகம்
கெப்பால் ஏரி
கெப்பால் ஏரி
அமைவிடம்மைசூர், கருநாடகம், இந்தியா
ஆள்கூறுகள்12°21′30.2″N 76°36′37.7″E / 12.358389°N 76.610472°E / 12.358389; 76.610472
முதன்மை வெளியேற்றம்தேவரகெரே
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்550 m (1,800 அடி)
அதிகபட்ச அகலம்600 m (2,000 அடி)
மேற்பரப்பளவு48 ஏக்கர்கள் (19 ha)[1]
குடியேற்றங்கள்மைசூர்

கெப்பால் ஏரி (Hebbal Lake, Mysore) என்பது இந்தியாவின் கருநாடகத்தின் மைசூர் நகரில் உள்ள ஒரு ஏரியாகும். [2]

தாவரங்களும் விலங்கினங்களும்[தொகு]

இந்த ஏரி வலசை வரும் பல பறவைகளுக்கு இடமளிக்கிறது. ஏரியின் சுற்றிலும் பல பறவை நோக்கிடங்கள் அமைந்துள்ளன. மேலும் ஏரியில் அணுகக்கூடிய சிறிய தீவில் ஒரு நோக்கு முனை உள்ளது. இசங்கு, நறுவிலி போன்ற பழம்தரும் செடிகள் ஏரியின் கரையில் உள்ளன. [3] [4] நாய்வேளை, ஐபோமியா கெய்ரிகா போன்ற பூக்கும் தாவரங்களும் இங்கு காணப்படுகின்றன. [5]

சூழலியல்[தொகு]

தொழிற்சாலை கழிவுகள், கழிவுநீர் போன்ற மாசுபாடுகள் ஏரியில் கலப்பதினால் ஹெப்பல் ஏரி மிகவும் மாசுபட்டது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து, மாசு பிரச்னையை சமாளித்து ஏரியை மீட்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. [6] [7] [8] இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏரியைப் பாதுகாப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) கையெழுத்திட்டனர். [9] [10] [11] [12] [13] [14] [15] [16] 15 மாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் ஏரியை புத்துணர்வுட்டும் திட்டமானது, 2021 பெப்ரவரியில் தொடங்கியது. [17] ஏரியில் மீன்கள் இறந்ததைத் தொடர்ந்து 2021 மார்ச் 24 அன்று ஹெப்பல் ஏரியில் 6 காற்றுப் புகுத்திளை இன்ஃபோசிஸ் அறக்கட்டளை நிறுவியது. [18]

மிகைநீர் உள்ள பகுதியை மீட்டெடுக்க கோரிக்கை[தொகு]

ஏரியை ஒட்டியுள்ள வேளாண் நிலங்களில் அதிகளவு நீர் தேங்கியுள்ளதால், அதில் சாக்கடை நீர் புகுந்ததால் தென்னை மரங்களுக்கு தொற்று நோய் ஏற்படும் நிலை ஏற்பட்டதால், விவசாயிகள் கவலையடைந்தனர். இது குறித்து 2021 ஆகஸ்ட் 10ம் தேதி, மாவட்ட பொறுப்பு அமைச்சர் எஸ். டி. சோமசேகரிடம் புகார் அளித்தனர். [19]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Infosys to develop Hebbal Lake http://timesofindia.indiatimes.com/articleshow/55608208.cms?
  2. TNN. "Dalvoy Lake is in for revival". TOI. பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.
  3. https://citytoday.news/bird-flu-fear-continues-to-haunt-mysureans/ Bird-flu-fear-continues-to-haunt-mysureans/
  4. Bird-Watching At Thippayyanakere https://starofmysore.com/bird-watching-at-thippayyanakere/
  5. .mysorenature.org. "Nature Walk at Hebbal Kere". .mysorenature.org. பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.
  6. Lakes in Mysore city dying a slow death: report http://timesofindia.indiatimes.com/articleshow/36131246.cms?
  7. Mysuru's Hebbal lake to get new life http://timesofindia.indiatimes.com/articleshow/52628288.cms?
  8. Infosys Foundation takes up conservation of Hebbal lake https://www.thehindu.com/news/national/karnataka/Infosys-Foundation-takes-up-conservation-of-Hebbal-lake/article14389219.ece
  9. More Lakes To Be Conserved Under CSR Funds https://starofmysore.com/more-lakes-to-be-conserved-under-csr-funds/
  10. Hebbal Lake Set To Be A Birding Hotspot https://starofmysore.com/hebbal-lake-set-to-be-a-birding-hotspot/
  11. https://starofmysore.com/sudha-murtys-aqua-touch/ Sudha Murty’s Aqua Touch
  12. https://starofmysore.com/hdk-sudha-murty-inspect-hebbal-lake/ HDK, Sudha Murty Inspect Hebbal Lake
  13. Infosys to develop Hebbal Lake http://timesofindia.indiatimes.com/articleshow/55608208.cms
  14. Mysuru's Hebbal lake to get new life http://timesofindia.indiatimes.com/articleshow/52628288.cms?
  15. https://starofmysore.com/urban-forests-keep-city-breathing-freely/ Urban Forests Keep City Breathing Freely
  16. Hebbal Lake: Birds & Birders’ Paradise https://starofmysore.com/hebbal-lake-birds-birders-paradise/
  17. No Bird Flu In City: Nagendra https://starofmysore.com/no-bird-flu-in-city-nagendra/
  18. "Hebbal Lake gets six aerators" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-03-24. பார்க்கப்பட்ட நாள் 2021-10-01.
  19. "Problems caused by Hebbal Lake to be brought to the notice of Minister" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-08-10. பார்க்கப்பட்ட நாள் 2021-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்பால்_ஏரி&oldid=3877795" இலிருந்து மீள்விக்கப்பட்டது