உள்ளடக்கத்துக்குச் செல்

கூவொன் எழிற்புள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூவொன் எழிற்புள்
கூவொன் எழிற்புள், 1917.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. rothschildi
இருசொற் பெயரீடு
Astrapia rothschildi
போர்சுட்டர், 1906

கூவொன் எழிற்புள் (Astrapia rothschildi) என்பது கிட்டத்தட்ட 39 செமீ நீளம் வரை வளரக்கூடிய நடுத்தர அளவினதான சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இதன் ஆண் பறவை கூந்தல் போன்ற நீல நிறத் தலையிறகுகளையும், இருண்ட இளம் பச்சை நிறத்திலான முதுகையும் ஒளிர்வான ஊதா கலந்த பச்சை நிறத்திலான நீண்டு வளர்ந்த கழுத்திறகுகளையும், மிக நீளமானதும் அகன்றதுமான ஊதா கலந்த கரிய வாலையும் கொண்டு கருமையான இறகமைப்புள்ளதாகும். இதன் பெண் பறவையானது ஆண் பறவையிலும் ஒப்பீட்டளவிற் சிறியதும் தன் வயிற்றுப் பகுதியில் வெளிறிய கோடுகளுடன் கூடிய கருமை கலந்த கபில நிறத்தைக் கொண்டதுமாகும்.

மிகக் குறைவாகவே அறியப்பட்ட இச்சந்திரவாசிப் பறவையினம் பப்புவா நியூ கினி நாட்டின் கூவொன் தீபகற்பத்தில் உள்ள மலைசார் காடுகளுக்கு மாத்திரம் தனிச்சிறப்பானதாகும். இது முதன்மையாகப் பழங்களையும் விதைகளையும் உணவாகக் கொள்ளும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. [[பன்னாட்டு பறவை வாழ்க்கை]] (2012). "Astrapia rothschildi". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளித் தொடுப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூவொன்_எழிற்புள்&oldid=3477074" இலிருந்து மீள்விக்கப்பட்டது