கூட்டுப் பொருள்
கலப்புருப் பொருட்கள் அல்லது கூட்டுத்திரவியங்கள் என்பது வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகள் கொண்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை பொறியியல் ரீதியில் ஒன்று கலப்பதன் மூலம் பெறப்படும் பொருட்களாகும். குறித்த ஒரு தேவைக்காக மிகச் சரியான இயல்பைக் கொண்ட தனிப்பொருள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் தேவைக்கேற்றவாறு வேறுபட்ட பொருட்கள் கலக்கப்பட்டு கூட்டுத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.
வரலாற்றில் கூட்டுத் திரவியங்கள்
[தொகு]நாகரிகத்தின் தொடக்க காலத்தில் எகிப்திய மக்கள் களிமண்ணினால் செங்கல் செய்து பயன்படுத்தினர். அது வெடிப்பதைத் தவிர்ப்பதற்காக களிமண்ணுடன் வைக்கோல் சேர்த்துப் பயன்படுத்தினர்."[1].
பண்டைய கட்டிடக் கலைகளில் சுண்ணாம்பு மற்றும் மணல் கொண்டு தயாரிக்கப்பட்ட சுண்ணாம்புச்சாந்து பயன்படுத்தப்பட்டது. சிகிரியா கல் ஓவியங்களில் களியுடன் தேன் கலந்து தயாரிக்கப்பட்ட சாந்தும் குகை ஓவியங்களை வரைவதில் மலையைத் தயார் செய்வதில் பல்வேறுபட்ட கலவைகளும் பயன்படுத்தப்பட்டன."[1]
கலப்புருப் பொருள்களின் பயன்பாடு
[தொகு]பாலங்கள், மதகுகள், வீடுகள் ஆகியவற்றை அமைப்பதற்குப் பயன்படும் சீமெந்துச் சாந்து ஒரு கலப்புருப் பொருள் ஆகும். இதிலுள்ள மணல் , இரும்பு சட்டகங்கள் உறுதியையும், சீமெந்து பிணைத்து வைத்திருக்கும் தன்மையையும் வழங்குகிறது.
கதிரை,மேசை, சிற்றலுமாரிகள் முதலானவற்றை அமைக்கப் பயன்படும் மென்பலகை.இதில் உறுதி மற்றும் வடிவத்தை வழங்கும் பொருளாக மரத்தூளும் பிணைத்து வைத்திருப்பதற்காக ஒருவகைப் பசையும் பயன்படுத்தப் படுகின்றது.
மின்விளக்குக் கவசம், கதிரை,படகு என்பவற்றைத் தயாரிக்கப் பயன்படும் நார்க்கண்ணடி; மெத்தை தயாரிக்கப் பயன்படும் தென்னம் தும்பு கலந்த மீள்மம் ,வாகனங்களின் பாதுகாப்புக் கண்ணாடி போன்றவை கூட்டுத் திரவியங்களால் ஆனவை ஆகும்."[1].
கலப்புருப் பொருட்களின் உள்ளடக்கம்
[தொகு]இயற்கையில் கிடைக்கும் தனிக்கூறை மட்டும் பயன்படுத்தி குறித்த தேவைக்குரிய பொருளைத் தயாரிக்க முடியாத சந்தர்ப்பங்களில் கூட்டுத்திரவியங்களின் தேவை ஏற்பட்டது. இது இருவகையான கூறுகளைக் கொண்டிருக்கும்.
- உறுதியை அதிகரிப்பதற்காகவும் வடிவத்தை வழங்குவதற்குமான கூறு.(Reimnforcement material)
- நிலைநிறுத்துவதற்கும் பிணைத்து வைத்திருப்பதற்குமான தாயப்பதார்த்தம்.(Matrix material) இது பொதுவாக பல்பகுதியப்பதார்த்தமாகக் காணப்படும்.
எ.கா: பாதுகாப்புக் கண்ணாடியில் கண்ணாடிப் பொருள் உறுதியை அதிகரிப்பதற்காகவும் பல்பகுதியப் பதார்த்தம் பிணைத்து வைத்திருப்பதற்கும் பயன்படுகிறது.
கலப்புருப் பொருள்களைப் பாகுபடுத்தல்
[தொகு]கலப்புருப் பொருள்களை பல்வேறு வகைகளில் பாகுபடுத்தலாம்.அவற்றின் கிடைத்தகு தன்மைக்கேற்பவும், கூறுகளின் இயல்புகள் அவற்றின் படையாக்கத்தன்மை என்பவற்றுக்கேற்பவும் பாகுபடுத்த முடியும்.
இயற்கையான கலப்புருப் பொருட்கள்
[தொகு]மரப்பலகை இயற்கையான கலப்புருப் பொருள் ஆகும். இது உறுதியளிக்கும் கூறாக செலுலோசு நாரையும் பிணைக்கும் பதார்த்தமாக இலிக்னினையும் கொண்டுள்ளது.[2][3].
என்புகள் உறுதியளிக்கும் கூறாக கல்சியம் பொசுபேற்றையும் பிணைக்கும் பதார்த்தமாக கொலாஜினையும் கொண்டது."[1]. காதுச்சிற்றென்புகள் உறுதியளிக்கும் கூறாக ஐதரொக்சி அயடைட்டையும் பிணைக்கும் பதார்த்தமாக கொலாஜினையும் கொண்டுள்ளது."[1].
வெளி இணைப்புகள்
[தொகு]- கலப்புரு பொருள் key concepts பரணிடப்பட்டது 2010-02-06 at the வந்தவழி இயந்திரம்
- Distance learning course in பன்னுருக்கள் மற்றும் கலப்புருக்கள் பரணிடப்பட்டது 2007-02-19 at the வந்தவழி இயந்திரம்
- கலப்புரு Sமற்றும் wich Structure of Minardi F1 Car பரணிடப்பட்டது 2008-05-28 at the வந்தவழி இயந்திரம்
- Teaching support பொருட்கள் for the University of Plymouth கலப்புருக்கள் degree பரணிடப்பட்டது 2009-05-29 at the வந்தவழி இயந்திரம்