கூட்டல்-நீக்கல் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டல்-நீக்கல் வினை (Addition-elimination reaction) என்பது வேதியியலில் நிகழும் இரண்டு-நிலை வினைச் செயல்முறையாகும். ஒரு கூட்டு வினையும் அதைத் தொடர்ந்து நீக்கல் வினையும் இவ்விரு நிலைகளில் நிகழ்கின்றன. இரண்டு நிலை வினைகளும் முடிந்த பின்னர் இறுதியில் ஒட்டுமொத்தமாக இவ்வினை ஒரு பதிலீட்டு வினையாக முடிகிறது. மேலும் இவ்வினையின் பொதுவான வினைவழிமுறை மின்னணு அசைல் பதிலீட்டு வினையுடன் ஒத்திருக்கிறது. பெரும்பாலும் எசுத்தர்கள், அமைடுகள் மற்றும் இவற்றுடன் தொடர்புடைய கட்டமைப்புகளில் இவ்வினை காணப்படுகிறது [1].

கார்பனைல்களுடன் அமீன்கள் வினைபுரிந்து இமீன்கள் உருவாகும் ஆல்கைலிமினோ–டி-ஆக்சோ- இரு பதிலீட்டு வினை மற்றொரு பொதுவான வகை கூட்டல்-நீக்கல் வினையாகும். இதே ஒத்தவரிசையில் மாற்று அமீன் வினைபடு பொருள்களுடன் இடை மாற்று இமீன்கள் ஈடுபடும் வினையும் இதற்கு உதாரணமாகும். நைட்ரைல்கள் நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு கார்பாக்சிலிக் அமிலங்கள் தோன்றும் வினையும் ஒரு வகையான கூட்டல்-நீக்கல் வினை வடிவமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Reaction-Map of Organic Chemistry Murov, Steven. J. Chem. Educ. 2007, 84, 1224 Abstract
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டல்-நீக்கல்_வினை&oldid=2901724" இலிருந்து மீள்விக்கப்பட்டது