கு. க. செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கு. க. செல்வம் (Ku. Ka. Selvam) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலமாக தமிழகத்தின் 15ஆவது சட்டமன்றத்திற்குச் சென்றார்.[1] [2]இவர் சென்னை, கோடம்பாக்கம், வடபழனி பகுதியில் வசித்து வருகிறார். சென்னை, வடபழனியில் உள்ள அறிஞர் அண்ணா பொதுநல மன்றத்தின் செயலாளராக 2009 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை பயிற்றுவிக்கும் பணியிலும் இம்மன்றம் செயல்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "15th Assembly Members". assembly.tn.gov.in. பார்த்த நாள் 27 மார்ச் 2019.
  2. "National Election Watch". பார்த்த நாள் 27 மார்ச் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._க._செல்வம்&oldid=2683680" இருந்து மீள்விக்கப்பட்டது