கு. ஆ. ஆபிரகாம்
கு. ஆ. ஆப்ரகாம் K. A. Abraham | |
---|---|
பிறப்பு | கேரளா, இந்தியா |
பணி | இதய நோய் மருத்துவர் |
அறியப்படுவது | இதய உள் மருத்துவம் |
விருதுகள் | பத்மசிறீ |
கு. ஆ. ஆப்ரகாம் (Kurudamannil Abraham Abraham) என்பவர் ஓர் இந்திய முறையிலான இதயநோய் மருத்துவர் மற்றும் மருத்துவத்துறை எழுத்தாளர் ஆவார்[1]. தென்னக இரயில்வேயின் தலைமையக மருத்துவமனையில் முன்னாள் தலைமை இதய மருத்துவராக பணிபுரிந்த இவர் அங்கேயே தலைமை மருத்துவ இயக்குநராக 25 ஆண்டுகள் பணிபுரிந்தார்[2]. வேலூரிலுள்ள கிருத்துவ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவப் பட்டம் பெற்ற இவர் இந்திய இராணுவத்தில் சேர்ந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய-பாக்கித்தான் போரின்போது படையினருக்கு சேவை புரிந்தார். போருக்கு பின்னர், தனது கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வதற்காக மீண்டும் அவர் 1973 ஆம் ஆண்டில் சி.எம்.சிக்குத் திரும்பினார். உள் மருத்துவத்தில் ஒரு பட்டம் பெற்றார். 1978 ஆம் ஆண்டில் தெற்கு இரயில்வேயின் தலைமை மருத்துவமனையில் பணியில் சேர்ந்த இவர் 2002 ஆம் ஆண்டு, வயது முதிர்வால் ஓய்வு பெறும் வரை அரசாங்கத்தில் பணிபுரிந்தார்[2]. இவரது பணிக்காலத்தில் தென்னக இரயில்வே மருத்துவமனை ஒரு சிறந்த முன்மாதிரி மருத்துவமனையாக வளர்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் இம்மருத்துவமனையில் 1000 இதயத் திறப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
பெரம்பூர் தலைமை மருத்துவமனையின் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், சென்னை அடையாரிலுள்ள ஃபோர்டிசு மலர் மருத்துவமனையின்[3] இதய நோயியல் துறையின் தலைவராகவும் அப்போலோ மருத்துவமனையின், இதய நோய்ப்பிரிவின் ஆலோசகராகவும் பணியாற்றினார்[4]. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகளில் மருத்துவக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்[5][6]. இந்திய அரசாங்கம் 1999 ஆம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.[7]
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்[தொகு]
- Margaret D'Mello, Kurudamannil A. Abraham (September 2012). "Assessment of Left Ventricular systolic function by Vector Velocity imaging". Indian Heart J. 64 (5): 532. doi:10.1016/j.ihj.2012.07.017.
- Kurudamannil A. Abraham, Margaret C. D'Mello (2011). "Systemic RV in Hypoplastic Left Heart Syndrome After Surgical Palliation". J Am Coll Cardiol Img. 4 (6): 687-687. doi:10.1016/j.jcmg.2011.04.008.
- Suresh Babu Kale, Rajan Kalaivani, Kurudamannil Abraham Abraham (September 2014). "Anomalous Left Coronary Artery from Pulmonary Artery with Good Ventricular Function in an Adult. A Rare Scenario". Scientific Research 4 (3): 74-77. doi:10.4236/ojts.2014.43015.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Dr.K.A. Abraham, Cardiologist, Chennai". Sehat. 2015. October 29, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 "It's the heart that matters". The Hindu. 1 April 2002. 19 அக்டோபர் 2002 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 29, 2015 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ Margaret D'Mello, Kurudamannil A. Abraham (September 2012). "Assessment of Left Ventricular systolic function by Vector Velocity imaging". Indian Heart J. 64 (5): 532. doi:10.1016/j.ihj.2012.07.017. http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3861280/.
- ↑ "Cardiologist & Cardiothoracic Surgeons". Apollo Hospitals. 2015. October 29, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kurudamannil A. Abraham, Margaret C. D'Mello (2011). "Systemic RV in Hypoplastic Left Heart Syndrome After Surgical Palliation". J Am Coll Cardiol Img. 4 (6): 687-687. doi:10.1016/j.jcmg.2011.04.008. http://imaging.onlinejacc.org/article.aspx?articleid=1110223.
- ↑ Suresh Babu Kale, Rajan Kalaivani, Kurudamannil Abraham Abraham (September 2014). "Anomalous Left Coronary Artery from Pulmonary Artery with Good Ventricular Function in an Adult. A Rare Scenario". Scientific Research 4 (3): 74-77. doi:10.4236/ojts.2014.43015. http://www.scirp.org/journal/PaperInformation.aspx?PaperID=49836.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. நவம்பர் 15, 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. July 21, 2015 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி)