குவைத் அரசியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவைத் அரசியல் (Politics of Kuwait) ஒர் அரை சனநாயக அரசியல் அமைப்புடன் கூடிய அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி அமீரகமாகும்.[1][2][3] ஓரு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் மற்றும் நியமிக்கப்பட்ட அரசாங்கம் இவை இரண்டிற்கும் இடையே வகுக்கப்பட்ட கலப்பு அரசியல் அமைப்பு இங்கு பின்பற்றப்படுகிறது. நியமிக்கப்பட்ட அரசாங்கத்தில் ஆளும் குடும்பத்தின் ஆதிக்கம் மிகுதியாக இருக்கும்[1][4][5].

குவைத் நாட்டின் அரசியலமைப்பு 1962 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. குடியுரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் சுதந்திரமாக கிடைக்கும் மத்தியகிழக்கு நாடுகளில் குவைத்தும் ஒன்றாகும்[6][7][8][9]. சுதந்திரம் உலகத்தில் எவ்வாறு உள்ளது என்பதைக் கருத்தாய்வு செய்து தரமிட்ட சுதந்திர விளக்கம் என்ற அமெரிக்க அமைப்பு குவைத்தை பகுதி சுதந்திரம் என்ற பிரிவில் வகைப்படுத்தியது. வளைகுடா நாடுகளில் குவைத் மட்டுமே இந்த தரத்தை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.[10] Kuwait is the only Gulf state that is ranked "partly free".[9]

அரசியலமைப்பு[தொகு]

குவைத் நாட்டின் அரசியலமைப்பு 1962 ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது. இவ்வரசியல் அமைப்பில் குடியரசுத்தலைவர் முறையிலான ஆட்சி மற்றும் நாடாளுமன்ற முறையிலான ஆட்சி இரண்டும் கலந்த கலப்பின அரசுமுறையின் கூறுகள் இருந்தன. குவைத் நாட்டிற்கு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் அவசியம் தேவை என்று அரசியலமைப்பு நிபந்தனை விதித்திருக்கிறது. அமீர் என்பவரே நாட்டின் தலைவர் அவராலேயே ஒரு பிரதமரை நியமிக்க முடியும். அரசியல் அமைப்புச் சட்டம் விதி நான்கின் படி, அமீரின் நியமனத்தை ஏற்கும் அல்லது எதிர்க்கும் உரிமையை குவைத் நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்பு அளித்துள்ளது. எனவே அமீரை ஆட்சியிலிருந்து அகற்றும் உரிமை நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம். தனடிப்படையில், உடல்நலம் இல்லாமல் இருந்த சாத் அல் சாபாவை குவைத் நாடாளுமன்றம் 2006 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்து அகற்றியது.

21 வயதை அடைந்த குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம். நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டுமெனில் ஒருவர் கண்டிப்பாக வாக்களிக்கும் உரிமை உடையவராகவும் குறைந்தபட்சம் 30 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அரசியலமைப்பு வெளிப்படையாக அரசியல் கட்சிகளை ஆதரிக்கிறது. ஆனால் சட்டவிரோத செயல்களை உருவாக்குகின்ற, செயல்படுத்துகின்ற எவரையும் அது ஆதரிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தும் அல்லது கட்சிகள் சார்ந்தவராக மற்றும் சித்தாந்தம், குலம், சமூகப்பிரிவு அடிப்படையிலும் செயல்படலாம்

சட்டமன்ற கிளை (நாடாளுமன்றம்)[தொகு]

குவைத்தில் சட்டமியற்றும் அதிகாரம் தேசிய நாடாளுமன்றத்திற்கு இருக்கிறது. அமைச்சர்களை அவர்களின் பதவியை விட்டு நீக்கும் அதிகாரம் இந்த அவையின் குறிப்பிடத்தக்க உரிமையாகும்[11] .

அரசியல் அமைப்புச் சட்டம் விதி நான்கின் படி, அமீரின் நியமனத்தை ஏற்கும் அல்லது எதிர்க்கும் உரிமையை குவைத் நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்பு அளித்துள்ளது. இதனடிப்படையில், உடல்நலம் இல்லாமல் இருந்த சாத் அல் சாபாவை குவைத் நாடாளுமன்றம் 2006 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்து அகற்றியது. அரபு உலகத்தில் குவைத்தின் தேசிய நாடாளுமன்றமே தனித்துவமாக இயங்கும் நாடாளுமன்றம் ஆகும்[12]. மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் வலிமையான நாடாளுமன்றமும் இதுவேயாகும்.[13]

தேசிய சட்டமன்றத்தில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க முடியும். நான்கு ஆண்டுகள் பணிபுரிவதற்காக மக்களின் வாக்கெடுப்பு மூலம் ஐம்பது பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அமைச்சரவை உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் போல உட்கார முடியும். அரசியலமைப்பு அமைச்சரவையின் எண்ணிக்கையை 16 எனக் கட்டுப்படுத்துகிறது, அமைச்சரவையில் குறைந்தது ஒரு உறுப்பினராவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Kuwait's Democracy Faces Turbulence". Wall Street Journal.
  2. Selvik, Kjetil (2011). "Elite Rivalry in a Semi-Democracy: The Kuwaiti Press Scene". Middle Eastern Studies: 478. http://www.academia.edu/2904861/Elite_Rivalry_in_a_Semi-Democracy_The_Kuwaiti_Press_Scene. 
  3. "Kuwait Country Report". Bertelsmann Foundation. Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-24.
  4. Selvik, Kjetil (2011). "Elite Rivalry in a Semi-Democracy: The Kuwaiti Press Scene". Middle Eastern Studies 47 (3): 477–496. http://dx.doi.org/10.1080/00263206.2011.565143. 
  5. Ulrichsen, Kristian Coates (2014). "Politics and Opposition in Kuwait: Continuity and Change". Journal of Arabian Studies: Arabia, the Gulf, and the Red Sea 4 (2): 214-230. http://www.tandfonline.com/doi/abs/10.1080/21534764.2014.974323#.VNu5xPmUdCZ. 
  6. Ibrahim Ahmed Elbadawi, Atif Abdallah Kubursi. "Kuwaiti Democracy: Illusive or Resilient?" (PDF). American University of Beirut. p. 7. Archived from the original (PDF) on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-24.
  7. "Kuwait". Reporters without Borders. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-24.
  8. "Kuwait - The New York Times". த நியூயார்க் டைம்ஸ். Kuwait has long ranked highly among Middle East nations for its protection of civil liberties, judicial independence and freedom of expression
  9. 9.0 9.1 "Kuwait rated 'partly free' by Freedom House". Mubasher. Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-11-24.
  10. "Freedom in the World: Kuwait". Freedom House. 2011. Archived from the original on 13 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 25 June 2012.
  11. Robert F. Worth (2008). "In Democracy Kuwait Trusts, but Not Much". த நியூயார்க் டைம்ஸ்.
  12. Nathan J. Brown. "Mechanisms of accountability in Arab governance: The present and future of judiciaries and parliaments in the Arab world" (PDF). p. 16-18. Archived from the original (PDF) on 2017-10-10. பார்க்கப்பட்ட நாள் 2015-11-24.
  13. Eran Segal. "Kuwait Parliamentary Elections: Women Making History" (PDF). Tel Aviv Notes. p. 1. Archived from the original (PDF) on 2015-01-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-24.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவைத்_அரசியல்&oldid=3657919" இலிருந்து மீள்விக்கப்பட்டது