குழந்தைக்குப் பெயர் வைத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழர்களிடையே குழந்தை பிறந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தக் குழந்தைக்குப் பெயர் வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இந்து சமயத்திலுள்ள சில சாதியினர் தங்கள் குல தெய்வப் பெயரை முதலில் குழந்தைக்கு வைக்கின்றனர். சில சாதியினர் தங்கள் குழந்தைகளில் ஆண் குழந்தையாக இருந்தால் தந்தை பெயரையும், பெண் குழந்தையாக இருந்தால் தாயின் பெயரையும் வைக்கின்ற வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். சில குடும்பத்தில் தமிழ் பற்றுதலின் காரணமாக தமிழ்ப் பெயர் வைக்கும் வழக்கமும் உள்ளது. சிலர் தாங்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அல்லது தாங்கள் விரும்பும் திரைப்படத் துறையினர் பெயர்களை வைக்கின்றனர். தற்போது நாகரீகமாகப் பெயர் வைக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியுள்ளது. இதனால், தற்போது எந்தப் பொருளுமில்லாமல் புதியதாக பெயர்கள் உருவாக்கப்பட்டு வைக்கப்படுகின்றன. இந்தப் பெயர் வைக்கும் நிகழ்வு சமயம், சாதி, இடம் மற்றும் விருப்பம் போன்ற சில பிரிவுகளின் கீழ் வேறுபடுகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]