குழந்தைகள் கலைக்களஞ்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குழந்தைகள் கலைக்களஞ்சியம் என்பது தமிழில் சிறுவர்களுக்கென வெளிவந்த ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட இக்கலைக்களஞ்சியம் பத்துத் தொகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு தொகுதியும் ஏறத்தாழ 100 பக்கங்களைக் கொண்டுள்ளது.

பதிப்புக்கள்[தொகு]

குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் மாதிரி ஒன்று 1965 இல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்டது. முதற்பதிப்புப் பணிகள் 1968 இல் தொடங்கி 1976 இல் நிறைவுபெற்றன. முதற்பதிப்பின் பதிப்பாசிரியராக ம. ப. பெரியசாமித்தூரன் செயற்பட்டார். இந்திய மத்திய அரசும் தமிழக மாநில அரசும் குழந்தைகள் கலைக்களஞ்சியப்பணிக்கு உதவிகள் வழங்கின.

குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் இரண்டாவது பதிப்புப் பணிகள் 1981 இல் தொடங்கப்பட்டு 1988 இல் நிறைவுசெய்யப்பட்டன.

திருத்திய பதிப்பின் இரண்டாம் பதிப்பு 10,000 படிகளும் மூன்றாம் பதிப்பு 2000 படிகளும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் வெளியிடப்பட்டன. நான்காம் பதிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.

திருத்திய பதிப்பின் இரண்டாம், மூன்றாம், நான்காம் பதிப்புக்கள் எனக் குறிப்பிடப்படுபவை மறுபதிப்புக்களே ஆகும். அவ்வகையில் 1988 இற்குப் பின்னர் குழந்தைகள் கலைக்களஞ்சியம் இற்றைப்படுத்தப்படவில்லை. இப்போது இக்கலைக்களஞ்சியம் இணையத்திலும் கிடைக்கின்றது.

வெளி இணைப்புக்கள்[தொகு]