குளோரியா அரியேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குளோரியா அரியேரா (Gloria Arieira) பிரேசில் நாட்டைச் சேர்ந்த சமசுகிருத அறிஞர் மற்றும் வேதாந்த ஆசிரியர் ஆவார். 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது கல்வி மற்றும் இலக்கியப் பங்களிப்புகளுக்காக இவருக்கு வழங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மும்பையில் சின்மயா ஆசிரமத்தில் வாழ்ந்தபோது வேதங்களின் தத்துவத்தை ஆழமாக ஆராய்வதற்காக குளோரியா இந்து வேதங்களைப் படித்தார். பகவத் கீதை மற்றும் வேதங்களின் சில பகுதிகளை போர்த்துகீசிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அத்வைத வேதாந்தத்தையும் சமசுகிருதத்தையும் கற்பிக்கும் வேதாந்த படிப்பு பள்ளியான வித்யா மந்திர் என்ற ஓர் இலாப நோக்கமற்ற கல்வி நிறுவனத்தை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவுக்கு அருகில் கோபகபனா நகரில் நிறுவியுள்ளார்.

குளோரியா அரியேரா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் வசிக்கிறார். போர்த்துகீசிய மொழியில் பாரம்பரிய முறையில் அத்வைத வேதாந்தத்தை போதிப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Who are the two Brazilian women who have been awarded Padma Shri?". தி எகனாமிக் டைம்ஸ். 26 January 2020. 11 மார்ச் 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 January 2020 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "India honours 2 Brazilian women with Padma Shri". The News Indian Express. 26 January 2020. 26 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. "India Honours Two Brazilian Women With The Padma Shri; Here's Why". Republic World. 26 January 2020. 26 January 2020 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரியா_அரியேரா&oldid=3356217" இருந்து மீள்விக்கப்பட்டது