குலு வெண்கலப் பானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலு வெண்கலப் பாத்திரம்
Kulu Vase - BM.JPG
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள குலு வெண்கலப் பாத்திரம்
செய்பொருள்வெண்கலம்
அளவுஉயரம் 15 செண்டி மீட்டர்
உருவாக்கம்கிமு முதல் நூற்றாண்டு
தற்போதைய இடம்பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்
பதிவு1880.22

குலு வெண்கலப் பானை (Kulu Vase), இந்தியாவின் தற்கால இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள லாஹௌல் ஸ்பிதி மாவட்டத்தின் தலைமையிடமான கேலாங் நகரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோண்டிய விகாரைப் பகுதியில் உள்ள பௌத்த குகையில் 1857-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. பௌத்த சமயத்தின் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய இப்பாத்திரம் கிமு முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது 1880ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளது.[1][2]

விளக்கம்[தொகு]

குலு வெண்கலப் பாத்திரம் கோள வடிவில், உயர்ந்த கழுத்து மற்றும் பரந்த விளிம்புடன் உள்ளது. குவளையில் உள்ள ஒப்பனைப் பட்டையில், இரத ஊர்வலத்திற்கு தலைமை தாங்கும் ஒரு அரசவை அல்லது மன்னரை விளக்குகிறது. நான்கு குதிரைகளால் இழுக்கப்படும் தேர், ஒரு குதிரைப் படை மற்றும் மற்றொரு அரச ஆளுமை யானை மீது ஏறிக் கொண்டு அவரைப் பின்தொடர்கிறது. ஊர்வலத்தின் முடிவில் இரண்டு பெண் இசைக்கலைஞர்கள் புல்லாங்குழல் மற்றும் வீணையை வாசிக்கிறார்கள். குவளையின் கழுத்துப் பகுதியில் உத்திர மடிப்புகள் மற்றும் இணையான கோடுகள் உட்பட பல்வேறு வடிவங்களின் வரம்பினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எந்த கல்வெட்டுகளோ அல்லது உள்ளூர் சூழலோ இல்லாமல் குவளையில் சித்தரிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையும் பொருளையும் கண்டறிவது கடினம்.

குலு வெண்கலப் பாத்திரத்தின் விளக்கம்

படக்காட்சிகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • E A Knox, Enlightening the Kulu Vase: a tour through peninsular enlightenment iconography in the early Buddhist period
  • V Elisseeff (editor), The Silk Roads: Highways of Culture and Commerce

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குலு_வெண்கலப்_பானை&oldid=3623849" இருந்து மீள்விக்கப்பட்டது