குலாம் முகம்மது சாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலாம் முகம்மது சாசு
Ghulam Muhammad Zaz
பிறப்புகாசுமீர்
தேசியம்இந்தியர்
பணிகலைஞர்Artist
அறியப்படுவதுசந்தூர்
விருதுகள்பத்மசிறீ

குலாம் முகம்மது சாசு (Ghulam Muhammad Zaz) இந்தியாவின் காசுமீரைச் சேர்ந்த ஓர் இசைக் கலைஞர் ஆவார். சந்தூர் மற்றும் பிற பாரம்பரிய இசைக்கருவிகளை கைவினைப் பொருட்களாக உருவாக்குவதில் பெயர் பெற்றவராவார். காசுமீர் நகரத்தில் சந்தூர் இசைக்கருவி உருவாக்கத் தெரிந்த கடைசி தயாரிப்பாளராக இவர் அறியப்படுகிறார்..[1][2][3][4][5]


இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருது இவருக்கு 2023 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதி வழங்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

குலாம் முகம்மது சாசு சிறிநகரின் சாய்னா கடல் பகுதியில் 1941 ஆம் ஆண்டு பிறந்தார்.[6] 1953 ஆம் ஆண்டு முதல் சந்தூர், ரபாப் மற்றும் சாரங்கி போன்ற பாரம்பரிய காசுமீரி இசைக்கருவிகளை தயாரித்து வந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kashmir’s last santoor maker, Ghulam Muhammad conferred with Padma Shri". The Print. The Print. https://theprint.in/india/kashmirs-last-santoor-maker-ghulam-muhammad-conferred-with-padma-shri/1337274/. 
  2. "Jammu Kashmir: मोहन सिंह स्लाथिया और गुलाम मोहम्मद जाज पद्मश्री से होंगे सम्मानित, उपराज्यपाल ने दी बधाई". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-01.
  3. Islam, Muheet Ul (2021-04-07). "Zaz, the last man in Kashmir to pour music into wood and strings". The Siasat Daily (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-01.
  4. Prabhasakshi (2023-01-28). "Kashmir के आखिरी संतूर सरताज Ghulam Mohammad Zaz को Padma Shri Award मिलने की खुशी मगर..." Prabhasakshi (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-01.
  5. Asma, Syed (2014-03-03). "End of an 'Era'". Kashmir Life (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-01.
  6. Muzamol, Peerzada Sheikh. "No strings attached: A craft wishers in Kashmir". TRT World. https://www.trtworld.com/magazine/no-strings-attached-a-craft-withers-in-kashmir-54183. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_முகம்மது_சாசு&oldid=3929151" இலிருந்து மீள்விக்கப்பட்டது