குலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குலா (Khul') எனில் இசுலாம் சமயத்தில் கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால், மனைவி கணவனை திருமண முறிவு செய்வாதாகும்.[1] ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சார்ந்த ஜமாத் தலைவரிடம் முறையிட வேண்டும். கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைத் தெளிவாகக் கூற வேண்டியதில்லை. அந்தத் தலைவர், கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் அப்பெண்ணைத் திரும்பக் கொடுக்குமாறு அறிவுறுத்தப்படும். அந்த மகர் தொகையை கணவன் பெற்றுக் கொண்டு மனைவியை விட்டு விலகுமாறு கணவனுக்கு கட்டளையிடப்படும். மகர் தொகையை கணவனுக்கு திருப்பி கொடுத்த பிறகே அப்பெண்ணுக்கு திருமண முறிவு உத்தரவு கிடைக்கும். குலா செய்தது தவறு எனப் பின்னர் அறிந்த பெண், மீண்டும் அதே கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினால், அந்தக் கணவனும் சம்மதித்தால் இருவரும் முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம்.

கணவரிடமிருந்து விவாகரத்தைப் பெற்றுக் கொண்டப் பெண், மூன்று மாதவிடாய்க் காலம் கழிந்த பிறகே வேறு நபரை மறுமணம் செய்து கொள்ள முடியும். திருமண முறிவு ஏற்படும் போது, அப்பெண்ணுக்கு கைக்குழந்தைகள் இருப்பின், அக்குழந்தைகளுக்கு 7 வயது கழிந்த பிறகு, குழந்தைகள் விருப்பப்படி, பெற்ற தாய் அல்லது தந்தையிடம் சேரலாம்.[2]

குலா குறித்தான நீதிமன்ற தீர்ப்புகள்[தொகு]

ஒரு குலா வழக்கில் கேரள உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதியரசர்கள் கொண்ட அமர்வு, 9 ஏப்ரல் 2021 அன்று வழங்கிய தீர்ப்பில் குலா முறையிலான திருமண முறிவு செல்லும் எனத்தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் கடந்த 1972ஆம் ஆண்டு அதே கேரள உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய குலா முறைக்கு எதிராக வழங்கிய தீர்ப்பில், நீதிமன்றத்திற்கு வெளியே முஸ்லிம்களில் கணவர், மனைவியை தலாக் செய்வது போன்ற உரிமை மனைவிக்கு இல்லை எனத்தீர்ப்பு வழங்கியிருந்தது. 2021-ஆண்டின் கேரளா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், 1972 ஆண்டின் தீர்ப்பு இரத்து செய்யப்படுகிறது.[3][4][5][6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nasir, Jamal J (2009). The Status of Women Under Islamic Law and Modern Islamic Legislation. Brill. p. 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004172739.
  2. "குலா என்றால் என்ன? தலாக் மற்றும் குலா வேறுபாடு என்ன?". Archived from the original on 2021-04-17. பார்க்கப்பட்ட நாள் 2021-04-17.
  3. முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து செய்யும் ‘குலா’ முறை செல்லும்: கேரளா உயர் நீதிமன்றம் தீர்ப்பு
  4. Muslim women can get divorce under personal law, says HC
  5. Kerala HC restores Muslim women’s divorce rights
  6. Muslim women have right to invoke extra-judicial divorce, rules Kerala HC

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குலா&oldid=3582103" இலிருந்து மீள்விக்கப்பட்டது