குற்றலை தாங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓர் எளிய குற்றலைத் தாங்கி

குற்றலைத் தாங்கி (ripple tank) என்பது நீரில் எழும் நுண்ணலைகளை விளக்கப் பயன்படும் சிறப்பான தாங்கி ஆகும். இது ஆழம் குறைந்த கண்ணாடியினாலான நீர்த் தாங்கி ஆகும். குற்றலைத் தாங்கிகளின் மேற்புறமாக ஒளியூட்டப்பட்டு இவ்வொளி நீரை ஊடுருவி செல்லும். கீழே வைக்கப்படும் திரையில் குற்றலையின் நகர்வு விம்பமாகப் பெறப்படும்.

குற்றலைகள் தாங்கியின் மேலாக மீள்மப் பட்டியின் மீது பொருத்தப்பட்டுள்ள பலகைத்துண்டில் அது மேற்பரப்புக்கு மேலாக அமைந்திருப்பதனால் உருவாக்கப்படலாம். பலகையில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் அதன் அச்சில் சுழல்வதால் குற்றலைகள் உருவாகும்.

விபரிக்கப்படக்கூடிய அலைகளில் இயல்புகள்[தொகு]

அலைகளின் ப்ல்வேறு இயல்புகளை இதன் மூலம் விபரிக்க முடியும். அவையாவன தள அலைகள், எதிரொளிப்பு, ஒளி முறிவு, அலைகளின் குறுக்கீடு மற்றும் அலைத்தடுப்பு என்பனவாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குற்றலை_தாங்கி&oldid=2745233" இருந்து மீள்விக்கப்பட்டது