குறுநூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு குறுநூல்

குறுநூல் (Miniature book) என்பது சிறிய அளவு கொண்ட நூலாகும். இவை அரை அங்குல சதுர வடிவில் இருந்து 2 x 3 அங்குல அளவு வரையான நூல்கள் இவ்வகையைச் சேரும். இவற்றின் உயரம், அகலம் அல்லது தடிப்பு 3 அங்குலத்துக்கு மேற்படுவது இல்லை. சுலபமாக இடத்துக்கிடம் எடுத்துச் செல்லலாம் என்பதாலும், மறைத்து வைப்பது இலகு என்பதாலும், 19 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் இவ்வாறான நூல்களுக்குப் பெரும் மதிப்பு இருந்தது. அக்காலத்துக் குறுநூல்களில் பல மொரோக்கோ நாட்டுத் தோலில் கட்டப்பட்டு, சரிகை வேலைப்பாடுகள் முதலியன செய்யப்பட்டு அழகுற அமைந்தன. அகரமுதலிகள், மொழி பெயர்ப்பிகள், சமயக் கதைகள், சில வேளைகளில் சுற்றுலாக் கையேடுகளும் கூட இவ்வடிவத்தில் உருவாக்கப்பட்டன.

பைபிள், கலைக்களஞ்சியங்கள், இசை நூல்கள், கதைகள், குழந்தைப் பாடல்கள், புகழ்பெற்ற பேச்சுக்கள் போன்றவையும் குறுநூல் வடிவில் வெளியிடப்பட்டன. பல புகழ் பெற்ற நூல்கள் குறுநூல் வடிவிலும் பதிப்பிக்கப் பட்டன. இவற்றுள் பல இன்று சேகரிப்போர் உருப்படிகளாக உள்ளன. இவை சில நூறு டாலர்களிலிருந்து பல ஆயிரம் டாலர்கள் வரை விலை போகின்றன.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுநூல்&oldid=3426312" இருந்து மீள்விக்கப்பட்டது