குறுக்கிடா மாற்றுப்பாதை அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உள்ளூர் - விரைவு வழிகளுடன் உள்ள ஓர் குறுக்கிடா மாற்றுப்பாதை அமைப்பு.

குறுக்கிடா மாற்றுப்பாதை அமைப்பு அல்லது குளோவர் இதழ் மாற்றுப்பாதை (cloverleaf interchange) அமைப்பில் இரண்டு மட்டங்களில் சாலை மாற்றங்கள் ஒன்றையொன்று குறுக்கிடாவண்ணம் நிகழ்கின்றன. சாலையின் இடது புறம் செல்லும் போக்குவரத்து ஒழுங்கில் (வலது புறம் செல்லும் நாடுகளில் திசைகளை மாற்றிக்கொள்க), இடதுபுறம் செல்ல சேவைச் சாலைகள் அமைக்கப்படுகின்றன. வலது புறம் செல்ல (இடது கை ஓட்ட ஒழுங்கில்) வண்டிகள் மேலாக அல்லது கீழாகச் செல்லும் சாலையில் நேராகச் சென்று பின்னர் முக்கால் வட்டமுள்ள (270°) சேவைச்சாலையின் மூலமாக குறுக்குச் சாலையில் இணையும்.

படத்தொகுப்பு[தொகு]

மிச்சிகன் மாநிலத்தில் வோமிங்கில் உள்ள ஓர் குறுக்கிடா மாற்றுப்பாதை அமைப்பு.  
பல பழைய குறுக்கிட மாற்றுப்பாதை அமைப்புகளில் சாய்வுச்சாலைகள் தரைச் சாலைக்கு இணையாக நீட்டிக்கப்படுகின்றன. கலிபோர்னியாவிலுள்ள இந்த அமைப்பில் உள்ளூர் - விரைவு வழிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.  
ஐரோப்பாவின் முதல் குறுக்கிடா மாற்றுப்பாதை 1935ஆம் ஆண்டில் இசுடாக்கோமில் இசுலூசென்னில் அமைக்கப்பட்டது.  
இலாசு ஏஞ்சலெசில் உள்ள இந்த குறுக்கிடா மாற்றுப்பாதையில் மேற்கேச் செல்லும்வழியில் உள்நுழையும் தானுந்துகளும் வெளியேறும் தானுந்துகளும் பின்னிக் கொள்வதைத் தடுக்க பாலங்கள் கட்டப்பட்டள்ளன.  
சென்னையில் உள்ள கத்திப்பாரா குளோவர் இதழ் மாற்றுப்பாதை ஆசியாவில் மிகப் பெரியதொரு அமைப்பாகும்.  

வெளி இணைப்புகள்[தொகு]