குர்பச்சன் ஜகத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குர்பச்சன் சிங் ஜகத் (Gurbachan Singh Jagat) (பிறப்பு 1 ஜூலை 1942) [1] இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார். அவர் 2007 சூலை 1 அன்று இந்தப் பணியில் நியமிக்கப்பட்டார் மற்றும் 22 சூலை 2013 அன்று இப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். புகழ்பெற்ற பொது ஊழியர் குர்பச்சன் ஜகத், தி ட்ரிப்யூன், சண்டிகரில் 2 மே 2016 அன்று அறங்காவலராக சேர்ந்தார்.

இவர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்றார். ஒன்றியப் பிரதேசத்தில் (AGMUT) கேடரில் 1964-ஆம் ஆண்டில் இந்தியக் காவல் பணியில் உறுப்பினரானார். இவர் தில்லியில் உதவி காவல் ஆணையர் மற்றும் கூடுதல் துணைக் காவல் ஆணையர், 1971 போரின் போது மேகாலயாவில் காவல்துறைக் கண்காணிப்பாளர், எல்லைப் பாதுகாப்புப் படையில் படைத்தலைவர், கோவாவில் காவல் கண்காணிப்பாளர் (சிறப்பு), துணை ஆணையர் (சிறப்புப் பிரிவு) மற்றும் தில்லி காவல்துறையில் இணை ஆணையர் (தலைமையகம்), சண்டிகர் காவல்துறை துணைத் தலைவர், எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் ஆகிய பதவிகளில் பணியாற்றினார். ஜம்மு எல்லைத் தலைமையகம், வடக்கு வங்க எல்லைத் தலைமையகத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் காவல்துறைத் தலைவராகவும், ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைக் காவல்துறைத் தலைவராகவும் (ஆயுதம்) மற்றும் சம்மு மற்றும் காஷ்மீரில் பிப்ரவரி 1997 முதல் டிசம்பர் 2000 வரை காவல்துறை இயக்குநர் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். மணிப்பூரின் ஆளுநராக நியமிக்கப்படும் வரை ஒன்றிய பொதுப் பணி தேர்வாணையக் குழுவில் ஐந்து ஆண்டுகள், பதினெட்டு மாதங்கள் தலைவராகப் பணியாற்றினார். [2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". பார்க்கப்பட்ட நாள் 31 December 2013.
  2. Official site of Manipur பரணிடப்பட்டது 2008-05-14 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்பச்சன்_ஜகத்&oldid=3854218" இலிருந்து மீள்விக்கப்பட்டது