உள்ளடக்கத்துக்குச் செல்

குருமாலி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருமாலி
பஞ்சபார்கனியா
কুড়মালি, কুর্মালী, कुड़मालि, କୁଡ଼ମାଲି
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்அசாம், சார்க்கண்டு, ஒரிசா, மேற்கு வங்காளம்[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
556,089  (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு)[2]
கணக்கெடுப்பில் சிலர் வங்காளி, ஒடியா, இந்தி ஆகியமொழிகளூடன் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்[சான்று தேவை].
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 இந்தியா
மொழிக் குறியீடுகள்
ISO 639-3Either:
kyw — குருமாலி
tdb — பஞ்சபார்கனியா
மொழிக் குறிப்புkudm1238  (குடுமாலி)[3]
panc1246  (பஞ்சபார்கனியா)[4]
{{{mapalt}}}
Kurmali-speaking region of India

குர்மாலி மொழி (Kurmali language , தேவநாகரி: कुड़मालि, வங்காளி: কুর্মালী,কুড়মালি , ஒரியா :କୁଡ଼ମାଲି / କୁର୍ମାଲି, kur(a)mālī) ஓர் இந்திய-ஆரிய மொழி. இது இந்தியாவின் கிழக்கே பேசப்படுகின்றது. குருமாலி பொதுவாக குடுமி மகாத்தோ மக்களுடன் தொடர்பான மொழி. குடுமி மகத்தோ மக்கள் சார்க்கண்டிலும், ஓரிசாவிலும், மேற்கு வங்காளத்திலும் குர்மி மோகந்தா என்றும் மோகந்தா என்றும் அறியப்படுகின்றார்கள். அசாமில் உள்ள குடுமி மக்களாலும் பேசப்படுகின்றது. இவர்கள் அசாமுக்கு பீகார், ஒரிசா, மேற்குவங்காளம் ஆகிய இடங்களிலிருந்து தேயிலைத் தோட்டத்தில் பணி செய்ய கொண்டுவரப்பட்டனர். குர்மாலி மொழியானது சாரியபாதா என்னும் நூலில் ஆலப்பட்டுள்ள மொழிக்கு மிக நெருக்கமானதாக இருக்கும் என்று சில அறிவாளிகள் கருதுகின்றனர்[5]. அப்பகுதி வணிக மொழியாக இதனைப் பஞ்சபார்கனியா (வங்காளி: পঞ্চপরগনিয়া) என்றழைக்கின்றனர். ஐந்து மாவட்டங்களை உத்படுத்திய பகுதியில் இது பயன்பட்டதால் இப்பெயர். இதனைத் தமாரியா என்று அழைத்தனர். குருமாலி மொழி குர்மி குமுகத்தின் ஒரு மரபார்ந்த மொழி

மொழி பரவியிருக்கும் பகுதி

[தொகு]

குருமாலி மொழி சார்க்கண்டு மாநிலத்தின் தென் கிழக்கே உள்ள செரைக்கேலா கார்சுவான், கிழக்கு சிங்குபும், மேற்கு சிங்குபும், இராஞ்சி பகுதிகளிலும், ஒரிசாவின் வடகிழக்குப்பகுதியில் உள்ள மயூர்பான், கெந்துசார், சாச்சுபூர், சுந்தர்கார் பகுதிகளிலும், மேர்கு வங்காளத்தின் மேற்குப்பகுதியில் உள்ள புருலியா, மெதினிப்பூர் மாவட்டங்களிலும் பேசப்படுகின்றது.

மாற்றுப்பெயர்கள்

[தொகு]

இம்மொழிக்குள்ள பிற பெயர்கள்: பெடியா (இசுலாமியரில் ஒரு பகுதியான பெடியா குழும மக்கள் பேசும் மொழி), தருவா, கோட்டா, பன் சவாசி, தந்தி, தாயீர், சிக்கு பராயிக்கு.

குருமாலியின் கிளை மொழி மயூர்பஞ்சா பகுதி மொழி

[தொகு]

மயூர்பஞ்சா பகுதியின் மொழி குருமாலி மொழியின் கிளைமொழியான மன்பும் பகுதி முருமாலிதார் என்னும் மொழியுடன் நெருங்கிய ஒப்புமை கொண்டுள்ளது.[6]

வணிக மொழி

[தொகு]

பஞ்சபார்கனியா என்பது புண்டு, தமார், சில்லி, சோனாகத்து, ஆர்க்கி, அங்காரா, இராஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த சார்க்கு ஆகிய பகுதி மக்களின் பொது தொடர்பாடல் வண்இக மொழி.

மொழியின் சில சொற்கள்

[தொகு]
மொழியின் சில சொற்கள்
குருமாலி குருமாலி (தேவநாகரி) பொருள்
கினா किना என்ன
கன कन? யார்
காஹே काहे ஏன்
கிசான் किसन எப்படி
இஹா ஆஉம்ஏ इहां आउंए இங்கே வா
மஞ கா⁴ர ஜாஇஹம்ʼ मञ घार जाइहं நான் வீட்டுக்குப் போகிறேன்
மஞ கா²இ ரஹலி मञ खाइ रहलि நான் சாப்பிட்டேன்
மஞ கா²இலம்ʼ मञ खाइलं நான் சாப்பிட்டுவிட்டேன்
மஞ ஜாம/ஜாப³ मञ जाम/जाब நான் செல்வேன்

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

[தொகு]
  1. "Kudmali". Ethnologue (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 May 2019.
  2. "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues – 2011" (PDF). www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 7 July 2018.
  3. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "குடுமாலி". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  4. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "பஞ்சபார்கனியா". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  5. Basu, Sajal (1994). Jharkhand movement: ethnicity and culture of silence – Sajal Basu – Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185952154. பார்க்கப்பட்ட நாள் 25 August 2012.
  6. Grierson, George Abraham. Linguistic Survey of India. p. 173.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருமாலி_மொழி&oldid=3110571" இலிருந்து மீள்விக்கப்பட்டது