குருத்துவம் (கத்தோலிக்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:36, 25 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)

குருத்துவம் அருட்சாதனம் மூலம் மக்கள் குருவாக திருநிலைப்படுத்தப்படுகிறார்கள். குருக்களுக்கு மட்டுமே திருப்பலி நிறைவேற்றவும், அருட்சாதனங்களை வழங்கவும் அதிகாரம் உண்டு. கடவுளின் அழைப்பை பெற்றவர்கள் மட்டுமே குருத்துவம் அருட்சாதனம் பெறுவார்கள். குருத்துவ அருட்சாதனத்தை ஆயர் அல்லது அதற்கு மேல்நிலையிலுள்ள பேராயர், கர்தினால், திருத்தந்தை ஆகியோர் வழங்குவர்.

குருத்துவத்தின் மூன்று நிலைகள்

  • திருத்தொண்டர்
  • குரு
  • ஆயர்

திருத்தொண்டர்

குருவாக பயிற்சி பெறுபவர்கள் பயிற்சியின் இறுதியாண்டுக்கு முந்தியாண்டில் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்படுகிறார்கள். திருத்தொண்டர்கள் திருமுழுக்கு, திருமணம், நோயில் பூசுதல் ஆகிய மூன்று அருட்சாதனங்களை வழங்க அதிகாரம் உண்டு.

குரு

குருவாக ஒருவரை ஆயர் திருநிலைப்படுத்துகிறார்.

கத்தோலிக்க திருச்சபையில் பெரும்பாலும் பங்குகளை நிர்வகிப்பவர்களாக உள்ளனர். கத்தோலிக்க திருச்சபை உயர்மறைமாவட்டம், மறைமாவட்டம், மறைவட்டம், பங்குதளம் என நிர்வாக பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஆயர்

முதன்மை கட்டுரை: ஆயர்
மறை மாவட்டத்தின் தலைவராக ஆயர் செயல்படுகிறார். குருப்பட்டம் பெற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்த, 35-வயது நிரம்பிய, நன்மதிப்பை பெற்ற குரு ஒருவர் திருதந்தையால் ஆயராக நியமிக்கப்படுகிறார்.

பேராயர்

கர்தினால்

முதன்மை கட்டுரை: கர்தினால்

திருதந்தை

முதன்மை கட்டுரை: திருத்தந்தை
திருச்சபையின் கண்கண்ட தலைவர் திருத்தந்தை ஆவார். திருத்தந்தை உரோமை உயர்மறைமாவட்டத்தின் ஆயராவார்.

ஆதாரங்கள்

குருத்துவம்
குருத்துவம் அருட்சாதனம்