குருசாகரம்
நூலாசிரியர் | ஒ. வே. விஜயன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
வகை | புதினம் (இலக்கியம்) |
வெளியீட்டாளர் | டிசி புக்ஸ் |
குருசாகரம் (Gurusagaram) ( கருணையின் நித்தியம் ) 1987 ஆம் ஆண்டு ஓ.வி.விஜயன் எழுதிய நாவல் ஆகும். இந்த நாவல் மனித ஆன்மாவின் ஊடாக நிகழும் ஆன்மீக ஒடிசியாகும். இது விஜயனின் முந்தைய படைப்புகளான கசாக்கிண்டே இதிஹாசம் மற்றும் தர்மபுராணம் போன்றவற்றிலிருந்து மொழி, பார்வை மற்றும் பண்புகளில் வேறுபடுகிறது. இது கேந்திர சாகித்ய அகாடமி விருது, கேரள சாகித்ய அகாதமி விருது மற்றும் வயலார் விருது உட்பட பல முக்கிய விருதுகளை வென்றது.
கதைச் சுருக்கம்
[தொகு]குருசாகரம் விஜயனின் முந்தைய படைப்புகளிலிருந்து மொழி, பார்வை மற்றும் பண்புகளில் வேறுபடுகிறது. இது தேடுபவரின் வாழ்க்கையில் குருவின் உள்ளார்ந்த தன்மையைப் பற்றி விவரிக்கிறது. குரு எங்கும் இருக்கிறார், எல்லாரிடமும் வெளிப்படுகிறார். தேடுபவர் குருவின் அருளைப் பெறுகிறார், ஏனெனில் இது தேடுபவருக்குத் தெரியாமல் மற்றும் நிபந்தனையின்றி நடக்கிறது. 1971 ஆம் ஆண்டு நடந்த வங்காளப் பிரிவினையைப் புகாரளிக்கும் பணியில் டெல்லியில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் குஞ்சுன்னியை மையக் கதாபாத்திரமாகக் கொண்டது இந்த நாவல். அனைத்து வகையான அகங்காரங்களையும் எவ்வாறு அழிப்பது என்பதை அறிய கதாநாயகர் ஆன்மீக ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு வேதனையான அனுபவத்தை அனுபவிக்கிறார். குருவிற்கான அவரது தேடலின் போது, அவர் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலிருந்தும் ஆசிரியர்களைச் சந்திக்கிறார், அவர்கள் ஒவ்வொருவரும் வழியில் அவருக்கு உதவும் பாடங்களைக் கற்பிக்கிறார்கள், மேலும் அவர் அவர்களில் பலருக்கு ஆசிரியராகிறார்.
தொடக்க அத்தியாயம் அவரது தந்தை எப்படி அவருக்கு ஆசிரியராக மாறுகிறார் என்பதையும், அங்கிருந்து தொடங்கும் ஆசிரியர்களின் சங்கிலி அவர் தனது இறுதி குருவைக் கண்டுபிடிக்கும் கடைசி அத்தியாயம் வரை தொடர்கிறது என்பதையும் விவரிக்கிறது. பல்வேறு பின்னணியில் இருந்து வரும் கதாபாத்திரங்களான அவரது குழந்தை பருவ நண்பரான கர்னல் பாலகிருஷ்ணன் தற்போது சுவாமி நிர்மலானந்தன், போரின் பின்விளைவுகளால் அலைக்கழிக்கப்பட்ட செக் நாட்டு ஊடகவியலாளரான ஓல்கா, அவர் பாலியல் பலாத்காரம் செய்த சிறுமி ஹைமாவதி, அவரது அலுவலகத்தில் சுருக்கெழுத்து எழுத்தாளர் லலிதா மற்றும் பலர் ஆசிரியர்களாக உள்ளனர். அவர் தனது மனைவி சிவானியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது மகள் கல்யாணியின் மீதான அன்பிற்கும் மனைவியின் மீதான வெறுப்பிற்கும் இடையில் சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கும், பிரிந்து வாழும் வாழ்க்கைக்கும் இடையிலான ஊசலாட்டம் அவருக்கு மன வேதனையையளிக்கிறது.
அவர் அடிக்கடி நிர்மலாந்தனிடம் சென்று வாழ்க்கை குறித்து விவாதித்தும் சில நேரங்களில் அமைதியடைந்தும் வந்திருக்கிறார். அத்தகைய வருகையின் போது தான் குஞ்சுன்னி ஆன்மீகத்தின் வழியே தனது பயணத்தைத் தொடங்குகிறார். அவரது வாழ்க்கையில் அமைதியின்மை பற்றி புலம்பிக் கொண்டிருந்த போது, சுவாமி அவரை ஆற்றின் கரையில் தனியாக விட்டுத் திரும்புகிறார், அங்கு புல்லுக்கு அடியில் வாழும் சிறிய பூச்சிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். இது அவரை ஒரு புதிய வெளிச்சத்திற்கு இட்டுச் செல்கிறது, மேலும் அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார், அவர் காலடி எடுத்து வைக்கும் புல்லுக்கு கூட மரியாதைளிக்க கற்றுக்கொள்கிறார். "அங்கயே வேதணைப்பிக்காதே எனக்கு நடக்கு கூடல்லோ" (உன்னை காயப்படுத்தாமல் என்னால் நடக்க முடியாது)- தான் மிதிக்கும் புல்லை நோக்கி அவர் பேசும் இந்த வாக்கியம் இந்த கட்டத்தில் அவர் பெற்ற அறிவின் தீவிரத்தை காட்டுகிறது. சில அறிவுத் துணுக்குகளால் ஞானம் பெற்றாலும், தன்னைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகளால் அவர் இன்னும் கலக்கமடைகிறார். இந்தச் சிரமங்களுக்கு நடுவில் தான் அவர் கொல்கத்தாவுக்கு வங்கப்பிரிவினையை அறிக்கையாக அனுப்பியுள்ளார். அங்கு சென்றதும் அவர் சிறுவயதில் தன் தந்தை அழைத்துச் சென்ற இடங்களை மீண்டும் பார்க்கிறார். பின்னர் அவர் தனது மகளுடன் மீண்டும் இந்த இடங்களுக்குச் செல்வதைக் காண்கிறோம், அவர் தனது தந்தையிடமிருந்து பெற்ற அறிவை தனது அடுத்த தலைமுறைக்கு மாற்ற முயற்சிக்கிறார். பரமஹம்சரின் ஞான அனுபவத்தை குஞ்சுன்னிக்கு நினைவூட்டும் வகையில், மேலே பறக்கும் நாரைகளின் கூட்டத்தைக் காணும் நேரத்தில் குறிப்பிட்ட இடமாற்றம் நிகழும் என்று கருதப்படுகிறது. அவர் அத்தகைய அனுபவத்தை அனுபவிக்கிறார், இது அவர் மூலம் அவரது மகளுக்கும் இது கடத்தப்படுகிறது.
போர் அறிக்கையும் அவருக்குப் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது, மிக முக்கியமான ஆசிரியராக, தனது மகனுடன் கைகோர்த்து இறந்த இந்துப் பெண்ணை அடக்கம் செய்ய முடிவு செய்யும் இசுலாமிய தந்தை அமைகிறார். போரும் அதன் வன்முறையும் அவரது சொந்த உள் கொந்தளிப்பின் பிரதிபலிப்பாகத் தெரிகிறது. அவர் கடந்து செல்லும் குழப்பங்களும் தனக்குள்ளேயே நடக்கும் சண்டைகளும் போரும் முடிவுக்கு வரும்போது இறக்கின்றன. ஆனால் போர் பிரிவினையை உருவாக்கியது போல், அவரது பிரச்சினைகளின் முடிவும் ஒரு காயத்துடன் வருகிறது - கல்யாணி அவரது மகள் அல்ல என்று சிவானியின் வெளிப்பாடு ஒரு காயமாகிறது. இந்த உண்மை முதலில் வேதனையாக இருந்தாலும், இதுவே அவரை தனது குருவைக் கண்டுபிடித்து அவரது அறிவை அடைய வழிவகுக்கிறது. அவர் தனது வேலையை விட்டுவிட்டு வீடு திரும்புகிறார், பாகவதத்தைத் தவிர அவருடைய அனைத்து புத்தகங்களையும் கொடுத்துவிடுகிறார். ஒருவேளை இந்த அறிவு அனைத்தும் அவருக்கு எதுவும் கொடுக்கவில்லை என்பதை உணர்ந்ததன் காரணமாக இவர் அவ்வாறு செய்திருக்கலாம். கடைசி அத்தியாயத்தில் குஞ்சுன்னி தனக்கு சொந்தமில்லாத தன் மகளிடம் தன் குருவைக் கண்டடைவதைக் காண்கிறோம். முழு உலகமுமே ஒரு ஆசிரியர், ஒவ்வொருவரிடமும் மற்றவருக்குக் கற்பிக்க ஒரு பாடம் இருக்கிறது என்பதை உணர இது அவரை வளரச் செய்கிறது. இப்படியாக அவரது குருவின் தேடல் கல்யாணியில் முடிந்தாலும் இவரது தேடல் அவளிடமே ஆரம்பமாகிறது போலும். அவளுக்காக மட்டுமே அவன் சேமித்து வைத்திருந்த அன்பு, உலகம் முழுவதும் பெரிதாகி, உலகம் முழுவதற்கும் மாற்றப்படுகிறது.
உள் எண்ணங்கள்
[தொகு]இந்தப் புதினம், அதன் மொத்தத்தில் நாம் அனைவரும் கர்மாவின் அடிமைத்தனத்தால் பிணைக்கப்பட்டுள்ளோம் என்ற செய்தியை அளிக்கிறது. கர்மா என்பது செயல்களைக் குறிக்கிறது. முன்னோர்களில் ஆரம்பித்து மகளில் முடிகிற ஆசிரியர் இதற்கு உதாரணம். மேலும், கல்யாணி தானே ஒரு முன்மாதிரியாக மாறுகிறார், ஏனெனில் அவரது வாழ்க்கையின் குறிக்கோள் குஞ்சுண்ணியின் ஞானம் என்று தெரிகிறது. அவள் தவறுகளில் இருந்து பிறந்து, குஞ்சுன்னிக்கு அவள் கலங்கரை விளக்கமாக மாறிய விதம் நம்மை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு புதிர் செய்கிறது. ஷிவானியின் ஆராய்ச்சி இரத்தப் புற்றுநோயைப் பற்றியது, அதே நோயால் அவரது மகள் இறந்தாள் என்பதும் மனிதர்களின் சக்தியற்ற தன்மையைக் காட்டும் மற்றொரு காரணியாகும்.
இன்னும் ஒரு சிந்தனை போரின் பயனற்ற தன்மையாகும். குஞ்சுன்னியின் மூத்த சகோதரன் முதல் ஓல்கா மற்றும் போலந்து செய்தி நிருபர் யானுஷ் வரை பல போர் கதைகள் மூலம் - விஜயன் எந்த யுத்தமும் நல்லதை உருவாக்கவில்லை என்பதை விளக்குகிறார். எப்பொழுதும் எஞ்சியிருப்பது பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரும் வேதனையும்தான். இருவரும் தனித்தனியாக செல்வதால் தனக்கும் ஷிவானிக்கும் இடையேயான போர் அழிவில் முடிகிறது.
ஆனால், முழுக்க முழுக்க அடிப்படையான காரணி நம் முன் கிடக்கும் குருத்தன்மை என்ற கடல் பற்றிய செய்தி. நாம் கண்களைத் திறந்து சுற்றிப் பார்த்தால், நாம் தேடுவதைக் கற்றுத் தரும் ஏராளமான நிகழ்வுகளையும், நமக்குத் தேவையானதைக் கற்றுக்கொடுக்கும் எண்ணற்ற நபர்களையும் காணலாம் என்ற செய்தி.
பின்னணி
[தொகு]விஜயனின் கூற்றுப்படி, இந்த நாவல் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீ சாந்திகிரி ஆசிரமத்தின் கருணாகரகுருவின் போதனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டது. குருவை சந்தித்த பிறகு விஜயன் ஆன்மீக மாற்றத்திற்கு உள்ளானார், இந்த மாற்றம் அவரது எழுத்துக்களிலும் பிரதிபலித்தது, இதற்குச் சிறந்த உதாரணம் குருசாகரம் . [1]
விருதுகள்
[தொகு]- 1990: கேந்திர சாகித்ய அகாடமி விருது [2]
- 1990: கேரள சாகித்ய அகாடமி விருது [3] [4]
- 1991: வயலார் விருது
குறிப்புகள்
[தொகு]- ↑ O. V. Vijayan. Gurusagaram. DC Books. Archived from the original on 9 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 July 2013.
{{cite book}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Kendra Sahitya Academy Awards (Malayalam)". Public Relations Department, கேரள அரசு. Archived from the original on 24 May 2007. பார்க்கப்பட்ட நாள் 1 July 2013.
- ↑ "Kerala Sahitya Akademi Award" (in Malayalam). Kerala Sahitya Akademi. Retrieved 1 July 2013.
- ↑ "Literary Awards" பரணிடப்பட்டது 2012-06-18 at the வந்தவழி இயந்திரம். Government of Kerala. Retrieved 1 July 2013.