குயில் (இதழ்)
Appearance
குயில் கவிதை இலக்கியத்திற்காக வெளிவந்த ஒரு திங்களிதழ் (மாதிகை) ஆகும். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் தொடங்கப்பட்டு வெளிவந்தது. 1947-இல் புதுக்கோட்டையிலிருந்து இவ்விதழ் வெளியிடப்பட்டது. 1948-இல் அப்போதைய சென்னை அரசு குயிலுக்குத் தடைவிதித்தமையால் சிலகாலம் வெளியீடு தடைப்பட்டது. பின்னர் மீண்டும் வார இதழாக வெளிவந்தது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குயில் இதழில் சிலகாலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.